முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை இந்துஜா.. மூக்குத்தி அம்மன்’ அப்டேட்..!

ஆர்ஜே பாலாஜி, நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் இந்துஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடித்து வெளியான ‘எல்.கே.ஜி’ படம், பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதையைத் தனது நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கினார் ஆர்ஜே பாலாஜி. இந்தப் படத்தைத் தயாரித்த வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம், அடுத்த படத்தையும் தங்களுக்கே செய்யுமாறு அவருக்கு அட்வான்ஸ் கொடுத்தது. எனவே, புதிய படத்துக்கான கதையையும் தனது நண்பர்களுடன் சேர்ந்து எழுதிய ஆர்ஜே பாலாஜி, அதில் அவரே நாயகனாக நடித்து, இயக்க முடிவு செய்துள்ளார். அவரோடு இணைந்து என்.ஜே.சரவணனும் இயக்குநர் பொறுப்பைக் கவனிக்கவுள்ளார். இவர்கள் இருவருமே ‘எல்.கே.ஜி.’ படத்தில் முதல்நிலை உதவி இயக்குநர்களாகப் பணியாற்றியவர்கள்.

ஆர்ஜே பாலாஜி இயக்குநராக அறிமுகமாகவுள்ள படத்துக்கு ‘மூக்குத்தி அம்மன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பிரதான பாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். முழுக்கதையும் அவர் மீது பயணிப்பது போலத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்துஜா இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாகர்கோவிலில் நடந்த படப்பிடிப்பில் நடித்த இந்துஜா தனக்கான காட்சிகளில் நடித்து முடித்து சென்னை திரும்பியுள்ளார். நயன்தாராவும் இந்துஜாவும் ஏற்கெனவே ‘பிகில்’ படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.

Advertisements

Next Post

மீண்டும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி..!

Thu Jan 9 , 2020
‘சர்கார்’ படத்துக்குப் பிறகு, மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, வி.ஜே.ரம்யா, கெளரி கிஷண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படம் கோடை விடுமுறை வெளியீடாக ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. […]

Actress HD Images

%d bloggers like this: