“உதயநிதி” படத்துக்கு இப்படியொரு சிக்கலா?

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள சைக்கோ படத்தின் டைட்டிலை மாற்ற சென்சார் போர்டு அறிவுறுத்தியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படம், சைக்கோ. மிஷ்கின் இயக்குகிறார். உதயநிதி ஹீரோவாக நடிக்கிறார். அதிதி ராவ், நித்யா மேனன், ராம், சிங்கம்புலி உட்பட பலர் நடிக்கின்றனர்.

மிஷ்கினின், நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களுக்குப் பிறகு இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா. இதில் உதயநிதி, பார்வையற்றவராக நடிக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் சிங்கிளான ‘உன்ன நெனச்சு’பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டிலுக்கு இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தை, கடந்த சில நாட்களுக்கு முன் சென்சார் அதிகாரிகள் பார்த்தனர். வழக்கமாக, படத்தில் வரும் சர்ச்சைக்குரிய வசனங்கள், வன்முறை காட்சிகள் போன்றவற்றை நீக்கத்தான் சொல்வார்கள். ஆனால் இந்தப் படத்தின் டைட்டிலை மாற்றுமாறு கூறியுள்ளனர். மனநோய் தொடரபான வார்த்தைகளை பயன்படுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகள்தான் இந்தப் பிரச்சனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதை ஏற்காத மிஷ்கின், ரிவைசிங் கமிட்டிக்கு சென்றார். கதைக்கு இந்தப் பெயர் பொருத்தமாக இருப்பதால், அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதை அடுத்து, நீண்ட விவாதம் மற்றும் ஆலோசனைக்குப் பிறகு அந்த டைட்டிலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisements

fogpriya

Next Post

உலக அழகி பட்டத்தை கைப்பற்றினார்.. "ஜமைக்கா"

Mon Dec 16 , 2019
ஜமைக்கா பெண் உலக அழகியானார்… இந்தாண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த இளம்பெண் டோனி ஆன்சிங் வென்றுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த சுமன் ராவ் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.69-வது உலக அழகிப் போட்டி கிழக்கு லண்டனில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த மாதம் 20ந் தேதி தொடங்கியது. மொத்தம் 111 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றதில், பல்வேறு போட்டிகளுக்குப் பின் 40 பேர் வரிசைப்படுத்தப்பட்டனர். உலக அழகி யார் என்பதை […]
%d bloggers like this: