ஜாதி, கௌரவ கொலை எதிர்த்து நடக்கும் ஒரு போராட்டமா? நாடோடிகள் 2 திரைவிமர்சனம்..!!

சசிகுமார்— சமுத்திரகனி கூட்டணியில் மீண்டும் நாடோடிகள் 2 படம் உருவாகி உள்ளது. சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகிய படம் நாடோடிகள் 2. இந்த படத்தில் பரணி, அஞ்சலி,அதுல்யா ரவி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு ஜஸ்டின் அவர்கள் இசை அமைத்து உள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இந்த படத்தை நந்தகோபால் அவர்கள் தயாரித்து உள்ளார். நேற்றே இந்த படம் திரை அரங்குகளில் வெளியாக வேண்டியது. பல பிரச்சனைகளுக்கு பிறகு இன்று மதியம் தான் இந்த படம் திரையரங்கில் வெளியானது. பல சிக்கல்களுக்கு பின் நாடோடிகள் 2 படம் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய கௌசல்யா– சங்கர் ஆகியோரின் உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது தான் இந்த நாடோடிகள் 2 படம். சமுதாயத்தில் நடந்து நாடோடிகள் சில முக்கிய பிரச்சனைகளையும், குறிப்பாக ஜாதி என்ற பெயரில் நடக்கும் அக்குராமங்களையும் மையமாகக் கொண்ட கதையாகும். இந்த படத்தில் ஜாதிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் சசிகுமார்.

அவரது கூட்டத்தில் முக்கியமான ஒருவராக இருக்கிறார் அஞ்சலி. இந்த படத்தில் பொதுநலத்துடன் இருப்பவர் தான் சசிகுமார். தினமும் வீதியில் போராட்டம் செய்வது, வாங்கும் சம்பளத்தை விட்டுக் போராட்டம் சமூகத்திற்காக நல்ல விஷயங்களுக்கு செலவு செய்வது என பல சமூக பணிகளை செய்பவர். இதனால் இவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. அவரது சொந்த மாமா கூட இவருக்கு பெண் தர முன்வரவில்லை.

இந்த நிலையில் ஒரு நாள் இவருக்கு பெண் தருவதாகச் சொல்லி அதுல்யாவின் பெற்றோர்கள் வருகின்றனர். அனைவர் முன்னிலையிலும் இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது. பிறகு தான் திருமணம் இரவு சசிகுமாருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அதுல்யா ஜாதி வெறி பிடித்த குடும்பத்தினரால் நடந்த விஷயங்கள் பற்றி சசிகுமார் அவர்களுக்கு தெரிய வருகிறது. அப்போது சசிகுமார் ஒரு அதிரடி முடிவு எடுக்கிறார். அதுல்யா யார்? அவரால் என்ன பிரச்சனை? ஜாதி வெறி பிடித்தவர்களினால் வரும் சிக்கல்களையும் எப்படி சமாளிக்கிறார்? அஞ்சலியை கரம் பிடிக்கிறாரா? என்ப துதான் படத்தின் மீதி கதை. இந்த படம் முழுக்க முழுக்க ஜாதியை ஒலிக்கவும், ஜாதிக்கு எதிராக குரல் கொடுத்து உருவாக்கப்பட்ட கதையாகும். அடுத்த தலைமுறையாவது ஜாதி இல்லாமல் இருக்கட்டும் என்ற நோக்கில் இந்த படம் முதல் அடி எடுத்து வைத்துள்ளது. இந்த படத்தில் ஜாதி வெறிக்கு எதிரான சமுத்திரகனியின் வசனங்கள் எல்லாம் சூப்பர் ஹிட். பரணி வழக்கம் போல் இந்த படத்தில் பட்டையை கிளப்பி உள்ளார். ஒரு சராசரி மனிதன் எப்படி எல்லாம் யூகித்து செயல்படுவார் என்பதை அப்படியே இயல்பாக காண்பித்து உள்ளார் இயக்குனர். மாமா கதாபாத்திரத்தில் நடிகர் ஞானசம்பந்தம் நடித்திருந்தார். காமெடியன் வேடத்தில் நமோ நாராயணன் நடித்திருந்தார். சில காட்சியில் மட்டும் சமுத்திரகனி அவர்கள் வருவார். காட்சிகள் கம்மியாக இருந்தாலும் அவருடைய நடிப்பு சிறப்பாக இருந்தது.

Advertisements

Next Post

முதல் படத்திலேயே இப்படியா... வாணி போஜனை கண்டு ஷாக்கான ரசிகர்கள்..“ஓ மை கடவுளே”டிரைலர்..!!

Sun Feb 2 , 2020
தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகைகள் பலரும் தொலைக்காட்சி தொடர்களில் இருந்தும், விளம்பரங்களில் இருந்தும் தான் வந்தவர்கள். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் வகையில் நம்ம வாணி போஜன். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சூப்பர் ஹிட் கொடுத்த சீரியல்களில் “தெய்வமகள்” சீரியலும் ஒன்று. இந்த சீரியலை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து மகிழ்ந்து வந்தார்கள் என்று கூட சொல்லலாம். இந்த சீரியலில் “சத்யா” என்ற கதாபாத்திரத்தில் […]
%d bloggers like this: