நந்தினி சீரியல் புகழ் “நித்யாராம்” “கெளதம்” திருமணப் புகைப்படம்..!

நந்தினி சீரியல் நடிகை நித்யா ராமுக்கும் கௌதம் என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சுந்தர் சி தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியலில் நந்தினியாக அறிமுகமாகி நடித்து அனைவரின் மனதிலும் பதித்துப்போனவர் நித்யா ராம். அவரின் நடிப்பை விட அவரின் புடவை, அவரின் மேக்கெப் இதை பார்ப்பதற்கு என்றே தனிக்கூட்டம் இவருக்கு உண்டு.

குறிப்பா நந்தினி சீரியல், இவ்வளவு டாப்பில போக இவர், ஒரு முக்கிய காரணமாக இருந்தாருனு சொல்லலும். அழகான சிரிப்பாலும் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும், அதாவது நந்தினி சீரியல்ல இவர் ஒரு பாம்பா வருவார் இதனால், நித்யா ராமுக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு. இவர் தற்போது குஷ்புடன் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலிலும் நடித்து வருகிறா

நித்யா ராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கெளதம் என்பவரை கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார். கெளதமும் நித்யாவும் கடந்த சில நாட்களாக ரிலேசன்ஷிப்பில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், இதை மறுத்துள்ள நித்யா, இது பெரியோர்களால் நிச்சயிக்கபட்ட திருமணம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கௌதம் ஆஸ்திரேலியாவில் பெரிய தொழில் அதிபர் என்றும், திருமணம் முடிந்த கையோடு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆக உள்ளதாகவும் நித்யா ராம் கூறியுள்ளார்.

நித்யாவின் சகோதரியான ரச்சிதா ராம் கன்னட திரையுலகில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

fogpriya

Next Post

"சாம்பியன்" - திரை விமர்சனம்..!

Wed Dec 18 , 2019
கணவனின் உயிரைப் பறித்த கால்பந்து மைதானத்துக்குள், மறந்தும் தன் மகன் கால் வைத்துவிடக் கூடாது என்று நினைக்கிறாள் அம்மா. ஆனால், சிறந்த கால்பந்து வீரனாக தன்னைப் பார்க்க ஆசைப் பட்ட அப்பாவின் கனவை நனவாக்க, அம்மா வுக்கு தெரியாமல் போட்டிகளில் பங்கேற் கிறான் மகன். ஆடுகளம் அந்த மகனுக்கு ஓர் உண்மையை திரைவிலக்கிக் காட்டுகிறது. அவனது அப்பாவின் இறப்பின் பின்னால் இருக்கும் மர்மம் விலகியபோது, பழிவாங் கப் புறப்படுகிறான் அந்த […]
%d bloggers like this: