பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசிய நயன்தராவின் வீடியோ வைரல்…மார்ச் 8 மகளிர் தினம் ஸ்பெஷல்..!!

நடிகை நயன்தாரா தென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளார். கடைசியாக ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார். வெகுநாட்கள் கழித்து இவர்கள் இணைவதால், தர்பார் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. இந்நிலையில் ‘வேலைக்கரன்’ படத்திலில் பெண்கள் முன்னேற்றம் குறித்து இடம்பெற்றிருந்த நயன்தராவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மகளிர் தினம் நெருங்கி வருவதால், 2017-ல் வெளியான அப்படத்தின் வீடியோ தற்போது வலம் வருகிறது. பெண்கள் தாங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை என்பதைப் பற்றி, வேலைக்காரன் படத்தில் பேசியிருப்பார் நயன்தாரா. 

அவர்கள் யாராக இருக்க விரும்புகிறார்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பெண்களுக்கு உண்டு என்று குறிப்பிட்ட அவர், தற்போதைய சமூக நிலைமை மற்றும் பல இடங்களில் பெண்கள் ஏன் தங்கள் சொந்த தேர்வுகளை நடைமுறைப்படுத்த முடியாமல் போகிறது என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார். மார்ச் 8 ஆம் தேதி அதாவது வரும் ஞாயிற்றுக் கிழமை மகளிர் தினம் கொண்டாடப்படுவதால், நயன்தாராவின் இந்த உரை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisements

Next Post

"அண்ணாத்த" படத்தில் ரஜினிக்கு வில்லனாகும்.. பிரபல நடிகர்.. யார் தெரியுமா?

Fri Mar 6 , 2020
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன், மீனா, குஷ்பு கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். டி இமான் இசை அமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. முதற்கட்ட படபிடிப்பு ஐதராபாத்தில் […]
%d bloggers like this: