நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல் படமாகிறதா?

திரி இஸ் ஏ கம்பெனி என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நானும் சிங்கிள் தான்’. இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டேவிட் ஆனந்த்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையமைத்து வருகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கோபி. இப்படம் பற்றி இயக்குனர் கூறும்போது, ‘சிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் கேட்சிங்கானது. அதன் அடிப்படையிலே ‘நானும் சிங்கிள் தான்’ என்ற டைட்டிலோடு களம் இறங்கி இருக்கிறோம். டைட்டில் போலவே கண்டெண்டிலும் தனிக் கவனம் செலுத்தி இருக்கிறோம்.

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிகப்பிரபலம். அந்தக்காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம். நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி பலர் ஆசீர்வதிக்கும் ஜோடியாக இருந்தாலும் இப்போது வரை சிலரால் ஆச்சர்யமாக பார்க்கும் ஜோடியும் கூட. இந்த படத்தின் ஹீரோவின் லட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான்.

தமிழ்சினிமாவில் பெரிதாக கல்லா கட்டிய படமான அஜித்தின் பில்லா படத்தில் நயன்தாரா டாட்டூ குத்தி இருப்பார். அந்த டாட்டூ குத்திய நபராக இப்படத்தின் ஹீரோ வருகிறார். நயனுக்கு டாட்டூ குத்திய ஹீரோ தன் ஹார்ட்டைப் பறிகொடுக்க காதல் பேய்ப் பிடித்து திரிவது தான் கதை. இதற்குள் நயன் விக்னேஷ் சிவன் காதல் சமாச்சாரமும் இருக்கும் என்றார். இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.


Advertisements

Next Post

மிரட்டும் மாஸ்டர் .. மாஸ்டர் செகண்ட் லுக் ரிலீஸ்.. தளபதி ரசிகர்கள் குஷி ..!!

Thu Jan 16 , 2020
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு செகண்ட் லுக்கில் விஜய்சேதுபதி லுக் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தளபதி புள்ளிங்களுக்கு பொங்கல் பரிசாக விஜய் இருக்கும் மாஸான செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. நியூ இயரை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
%d bloggers like this: