பிரச்சினைகள் முடிவுக்கு வந்தது..விரைவில் வெளியாகும் “நெஞ்சம் மறப்பதில்லை”

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் மீதான பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்ததால், படம் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம், க்ளோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் நீண்ட நாட்களாகவே தயாரிப்பில் இருக்கிறது.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால், பலமுறை இந்தப் படம் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுத் தள்ளிவைக்கப்பட்டது. ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ பிரச்சினை முடிந்து வெளியானால், இந்தப் படமும் வெளியாகிவிடும் எனத் தகவல் வெளியானது. அதைப் போலவே ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் வெளியாகிவிட்டதைத் தொடர்ந்து, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் மீதான பிரச்சினையும் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், படம் விரைவில் வெளியாகும் என புதிய போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் டீஸர் மற்றும் 3 ட்ரெய்லர்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. அனைத்துக்குமே இணையத்தில் நல்ல வரவேற்பு இருந்துள்ளது. இதனால், தற்போது படக்குழு அறிவிப்பால் பலரும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisements

fogpriya

Next Post

'தர்பார்' ட்ரெய்லர் வெளியீடு எப்போது? ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்..!

Sun Dec 15 , 2019
‘தர்பார்’ ட்ரெய்லர் வெளியீடு எப்போது என்பதை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 7-ம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி ‘தர்பார்’ ட்ரெய்லர் வெளியாகும் […]
%d bloggers like this: