6ம்தேதி திருமணம்.. காதல் கணவருடன் ஆஸ்திரேலியாவில் செட்டில்.. பிரபல சீரியல் நடிகை அதிரடி..!

சென்னை: பிரபல சீரியல் நடிகை நித்யா ராமுக்கு வரும் 6ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் கங்கா என்ற நாக கன்னியாக அறிமுகமானவர் கன்னட நடிகை நித்யா ராம். 2015ம் ஆண்டு ‘முட்டு மனசே’ என்ற கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அவர், தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் அமையாததால் சீரியல் பக்கம் தன் கவனத்தை திருப்பினார். கன்னடத்தில் சில சீரியல்களில் நடித்தவர், நந்தினி மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார். அந்த சீரியல் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்ததைத் தொடர்ந்து தற்போது லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடித்து வருகிறார்.

நித்யாவும், ஆஸ்திரேலிய தொழிலதிபர் கௌதம் என்பவரும் காதலித்து வருவதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. விரைவில் அவர்களது திருமணம் நடைபெறும் எனக் கூறப்பட்டது. தற்போது அதன் அடுத்தகட்டமாக அவர்களது திருமணம் வரும் 6ம் தேதி நடைபெறுவது உறுதியாகியுள்ளது. ஆனால் இது காதல் திருமணம் இல்லை என நித்யா தெரிவித்துள்ளார். கௌதமின் அம்மாவும், தனது அம்மாவும் தோழிகள் என்றும், அவர்கள் இருவரது முடிவுப்படியே தங்களது திருமணம் நடைபெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

திருமணம் முடிந்ததும் நித்யாவும் ஆஸ்திரேலியா சென்று விடுவாராம். அங்கேயே செட்டிலாகி விடும் முடிவில் அவர் இருக்கிறாராம். எனவே இனி அவரை சீரியல்களில் பார்க்க முடியாதே என அவரது ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். ஆனாலும் அவரது திருமணத் தகவல் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

ஏற்கனவே, கடந்த 2014ம் ஆண்டு வினோத் என்பரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் நித்யா. ஆனால், கருத்துவேறுபாடு காரணமாக அவர்கள் விவாகரத்து செய்து விட்டனர். தற்போது நடைபெற உள்ளது நித்யாவின் இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

fogpriya

Next Post

சியான் விக்ரம் 58வது படத்தின் டைட்டில் லீக்..?

Sun Dec 1 , 2019
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம் 58’ படத்தின் டைட்டில் ‘அமர்’ என்ற தகவல் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ‘விக்ரம் 58’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எஃப் நாயகி ஸ்ரீனிதி ஷெட்டி நடித்துள்ளார். கே.எஸ். ரவிக்குமார் மற்றும் கோமாளி இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் […]
%d bloggers like this: