சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ டீஸர் வெளியானது..!

சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகிவருகிறது. சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சூரரைப் போற்று’.  இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்திற்கான ‘மாறா’ தீம் மியூசிக்குக்கான ரேப் பாடலை நடிகர் சூர்யா தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார். அந்த தீம் மியூசிக் முதலில் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தனர். இப்படத்தின் தாறுமாறான 2-வது போஸ்டர் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. சூர்யாவின் குறலில் ‘திமிரு திமிரு திமிருடா’ எனும் மாறா தீம் பாடலுடன் வெளியாகியுள்ள இந்த மிரட்டலான டீஸர் தற்போது செம வைரலாகிவருகிறது.

Advertisements

Next Post

நாய்க்காக பைக்கை திருப்பியதால் விபத்து... இளம் இயக்குனர் விபத்தில் பலி.. திரையுலகினர் அதிர்ச்சி..

Wed Jan 8 , 2020
பைக் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளம் சினிமா இயக்குனர் பரிதாபமாக உயிரிழந்தார். அசோகன், பபிதா பஷீர், ஜேம்ஸ் உட்பட பலர் நடித்து வெளியான மலையாள படம், ஓர்மயில் ஒரு ஷிஷிரம். இந்தப் படத்தை இயக்கி இருந்தவர் விவேக் ஆர்யன். இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் பணியாற்றிய விவேக், அவரது புகழ்பெற்ற த்ரிஷ்யம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். பின்னர் மெமரிஸ் என்ற படத்திலும் பணியாற்றினார். தமிழில் சில குறும்படங்களை […]

Actress HD Images

%d bloggers like this: