முதல் படத்திலேயே இப்படியா… வாணி போஜனை கண்டு ஷாக்கான ரசிகர்கள்..“ஓ மை கடவுளே”டிரைலர்..!!

தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகைகள் பலரும் தொலைக்காட்சி தொடர்களில் இருந்தும், விளம்பரங்களில் இருந்தும் தான் வந்தவர்கள். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் வகையில் நம்ம வாணி போஜன். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சூப்பர் ஹிட் கொடுத்த சீரியல்களில் “தெய்வமகள்” சீரியலும் ஒன்று. இந்த சீரியலை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து மகிழ்ந்து வந்தார்கள் என்று கூட சொல்லலாம். இந்த சீரியலில் “சத்யா” என்ற கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்து வந்தார். தற்போது இவர் பிசியாக படங்களில் நடித்து வருகிறார். நடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் ஒன்றிலும் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் வாணி போஜன்.

இதனை தொடர்ந்து தெலுங்கு நடிகர் விஜய் தேவர் கொண்டா தயாரிக்கும் முதல் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாணிபோஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். விஜய் தேவர் கொண்டா செய்யப்பட்டு சூப்பர் ஹிட்டான பெல்லி சூப்புடு என்ற படத்தை இயக்கிய தருண் பாஸ்கர் தான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகை வாணி போஜன் அவர்கள் தமிழில் நடித்த “ஓ மை கடவுளே” என்ற படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை அஷ்வத் மாரிமுத்து என்ற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படம் காமெடி, ரொமான்ஸ் கலந்த கலவையாக படம் இருக்கிறது. இந்த படத்தை ராட்சசன் படத்தை தயாரித்த ஆக்சிஸ் பிலிம் பேக்டரி தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து உள்ளார். சின்னத்திரையில் இருந்த போது நடிகை வாணி போஜன் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருந்தார். இந்த நிலையில் வெள்ளித்திரையில் இவரை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் ஓ மை கடவுளே என்ற படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பி வருகின்றன.

மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் கவுரவ தோற்றத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் இந்த படத்தில் ரமேஷ் திலகம், எம் எஸ் படத்தில் சாரா என பல நடிகர்கள் காமெடியில் கலக்கி உள்ளார்கள். இந்தப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த ரொமான்ஸ் திரைப்படம் என்பதால் பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “ஓ மை கடவுளே” படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது. இதனை ரசிகர்கள் அனைவரும் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். இந்த படம் பிப்ரவரி 14 ஆம் தேதி திரைக்கு வரப்போகிறது.

Advertisements

Next Post

இந்திய சினிமாவில் முதல் முறையாக ஹீரோவாகும் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

Mon Feb 3 , 2020
இந்திய சினிமாவில் இதுவரை கிரிக்கெட் வீரர்கள் சின்ன சின்ன கேரக்டர்கள் மட்டுமே நடித்து இருந்த நிலையில் முதல் முறையாக கிரிக்கெட் வீரர் ஒருவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் ஒன்று தமிழில் உருவாக உள்ளது. இந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்திய கிர்க்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் ஒருவருமான ஹர்பஜன்சிங் ஏற்கனவே சந்தானம் நடித்து வரும் ‘டிக்கிலோனா’ என்ற திரைப்படத்தில் ஒரு கேரக்டரில் […]
%d bloggers like this: