பாரதிராஜாவின் சாதனையை முறியடிப்பதே முழுமையான சாதனை : பார்த்திபன்

திரைத்துறையில் பாரதிராஜாவின் சாதனையை முறியடிப்பதே முழுமையான சாதனை என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து, இயக்கிய ஒத்த செருப்பு சைஸ்7′ என்ற படம் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. இதற்கான சான்றிதழ் வழங்கும் விழா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஃபாப்டா அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் பங்கேற்று பார்த்திபனை பாராட்டிப் பேசினர். நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன், “விஜய், அஜித் மாதிரி கமர்ஷியல் வேல்யூ உள்ள சினிமாவில் தானும் ஓடவேண்டுமென்றால் ஏதாவது வித்தியாசமாக செய்தாக வேண்டும் என்றார். அதற்காகவே ‘ஒத்த செருப்பு’ படத்தை எடுத்ததாகவும், தற்போது இதற்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisements

Next Post

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை..!

Fri Aug 23 , 2019
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, குருவிமலை, வெள்ளைகேட், பொன்னேரிகரை, வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திக்கு மேலாக கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நேற்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாரல் […]
%d bloggers like this: