“பேப்பர் பாய்” படப்பிடிப்பு..!பூஜையுடன் தொடங்கியது..

சுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் “பேப்பர் பாய்” படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை வளசரவாக்கத்தில் பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் அவர்கள் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
 சுவாதிஷ் பிக்சர்ஸ் சார்பாக PSJ பழனிராஜன்  தயாரிக்கும் இப்படத்தை, இயக்குனர்  விஜய் மில்டனிடம் கழுகு, கோலிசோடா 2 போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய “ஸ்ரீதர் கோவிந்தராஜ்” இயக்குகிறார். இப்படத்திற்கு கோலி சோடா , சண்டி வீரன் போன்ற படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ஜெகதீஷ் V விஸ்வா , படத்தொகுப்பு எல்.வி.கே தாஸ், நடனம்- சாண்டி மாஸ்டர் இப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில்…. இப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற “பேப்பர் பாய்” படத்தின் ரீமேக் ஆகும்.  தமிழுக்கு தகுந்தார்போல் அதில் சிறு சிறு மாற்றங்களை உருவாக்கி உள்ளோம். அன்றாடம் பேப்பர் போட்டு வாழ்க்கை நடத்தும் இளைஞனுக்கும் கோடீஸ்வர நாயகிக்கும்  உருவாகும் காதல், அதனால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் தான் இப்படத்தின் கதை. இது முழுவதுமாக எதார்த்தங்கள் நிறைந்த கதையாக இருக்கும். காதல் காட்சிகள் நிறைந்த படம் என்பதால் இதில் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். தமிழில் காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை இவ்வரிசையில் ஒரு எதார்த்த காதல் கதையை நீங்கள் 2020 இல் காணலாம். 

Advertisements

fogpriya

Next Post

மாஃபியா’ ரிலீஸ் தேதி மாற்றம்..!

Fri Dec 13 , 2019
அருண் விஜய் நடித்துள்ள ‘மாஃபியா’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.‘துருவங்கள் 16’ மற்றும் ‘நரகாசூரன்’ படங்களைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘மாஃபியா’. அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் ப்ரியா பவானிசங்கர் ஹீரோயினாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளனர். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஜாக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். ஒரேகட்டமாக இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இயக்குநருக்கு டெங்கு […]

Actress HD Images

%d bloggers like this: