பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா?.. கோவா பட விழாவில் ஷாக் தந்த நித்யாமேனன்..!

சினிமா மீதான தனது காதல் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம் போன்றது என நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார். இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து ஏராளமான திரைப்பட வல்லுனர், நடிகர், நடிகையர், இயக்குனர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டு இருக்கிறார்கள். இந்த நிகழ்வில் தினமும் திரைத்துறையை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும். நேற்றைய கலந்துரையாடலில் நடிகை நித்யா மேனன் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், ” என்னுடைய கேரக்டர் சினிமாவுக்கு சுத்தமாக செட்டாகாது. காடுகளில் அலைந்து திரிந்து, மிருகங்களை பற்றி படமெடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. ஆனால் சந்தர்ப்ப சூழலால் நடிகையாகிவிட்டேன்.

ஆனால் சமீபகாலமாக நான் சினிமாவை மிகவும் நேசிக்க ஆரம்பித்துவிட்டேன். இது ஒரு அழகான துறை. இதன் மூலம் மக்களின் மனநிலையை என்னால் மாற்ற முடிகிறது.

எனது சினிமா வாழ்க்கை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் போன்றது. காதல் திருமணம் போன்று, எடுத்த உடனே கணவன் – மனைவிக்குள் அந்நோன்யம் பிறந்துவிடாது. அரேஞ்சுடு மேரேஜில் நாளாக ஆக தான் ஆழமான காதல் உருவாகும். அதுபோல் தான் எனக்கு சினிமா மீது இப்போது காதல் வந்துள்ளது.

எனக்கு மெத்தட் ஆக்டிங் எல்லாம் தெரியாது. என்னை யாராலும் அதிகமாக வேலை வாங்க முடியாது. சீன்களை படித்து, புரிந்துகொண்டு நானாகவே நடித்துவிடுவேன். அது தானாகவே வந்துவிடும்”, என நித்யா மேனன் கூறினார்.

Advertisements

fogpriya

Next Post

தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம்..!

Fri Nov 29 , 2019
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கான திட்டவரைவு தயாரிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அணுசக்தித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அரசு முன்மொழிந்துள்ளதாகவும், அதற்கான திட்டவரைவு தயாரிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இரண்டு ஏவுதளங்கள் உள்ளன. இங்கு ஜிஎஸ்எல்வி மற்றும் பிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கள் ஏவப்பட்டு வருகின்றன. தற்போது […]
%d bloggers like this: