‘பார்த்திபன் வடிவேலு’ இணையும் பாரதி கண்ணம்மா 2..!

யக்குனர் சேரன் இயக்கிய முதல் திரைப்படமான பாரதி கண்ணம்மா திரைப்படத்தின் கதை சீரியஸாக சென்று கொண்டிருந்தாலும் அதில் பார்த்திபன் வடிவேலுவின் காமெடி அவ்வப்போது வந்து பார்வையாளர்களை குஷிப்படுத்தும். இந்த படத்தில் காமெடியை இன்னும் பலர் தொலைக்காட்சிகளில் பார்த்து ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதுஇந்த நிலையில் சேரனின் இயக்கத்தில் விரைவில் ’பாரதி கண்ணம்மா 2’ படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பின் பார்த்திபன் மற்றும் வடிவேலு மீண்டும் இணைந்து காமெடியில் கலக்கப் போவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது

வடிவேலு மற்றும் பார்த்திபன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடி செய்திருந்தாலும் பாரதி கண்ணம்மா’ படத்தின் காமெடியை யாராலும் மறக்க முடியாது. முதல் பாகத்தை மிஞ்சும் வகையில் இருவரும் ‘பாரதி கண்ணம்மா 2’ படத்தில் கலக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது

Advertisements

fogpriya

Next Post

"ஃபிலிம்ஃபேர்" விருது வென்றவர்களின் பட்டியல்..!

Mon Dec 23 , 2019
2019-ம் ஆண்டுக்கான 66-வது ‘ஃபிலிம்ஃபேர்’விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நேரு உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றனர். சந்தீப் கிஷனும், ரெஜினாவும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். விருது வென்றவர்கள் பட்டியல்: சிறந்த படம் – பரியேறும் பெருமாள்சிறந்த இயக்குநர் – ராம்குமார் (ராட்சசன்)சிறந்த நடிகர் – தனுஷ் (வடசென்னை), விஜய் சேதுபதி (96)சிறந்த நடிகை […]
%d bloggers like this: