பட்டாஸ் படத்தின் பரபரப்பான அறிவிப்பு..!

நடிகர் தனுஷ் நடித்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்று வரும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள இரண்டு படங்களான பட்டாஸ் மற்றும் சுருளி ஆகிய திரைப்படங்கள் வெகு விரைவில் ரிலீசாக உள்ளன இந்த நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தின் புதிய அப்டேட் ஒன்றை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது.
இந்த படத்தின் சீன்புரோ’ என்ற பாடல் நாளை மாலை 6.30 மணிக்கு சிங்கிள் பாடலாக வெளியாக இருப்பதாகவும் இந்த பாடல் விவேக்-மெர்வின் இசையில் தனுஷ் பாடி உள்ளதாகவும் சத்யஜோதி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனை அடுத்து தனுஷ் பாடிய இந்த பாடலை கேட்க அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். நாளை மாலை ட்விட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தெறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். விவேக்-மெர்வின் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாஷ்பாபு படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

fogpriya

Next Post

மீரா மிதுனை கழிவி ஊற்றிய நடிகர்..!

Sun Dec 1 , 2019
சமூக வலைத்தளங்களால்  பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் படமாக    “கருத்துக்களை பதிவு செய் ” படம் உருவாகி வருகிறது. ராகுல்பரமகம்சா இயக்கும் இப்படத்தை RPM சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது.  எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகை மீரா மிதுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  சமீபத்தில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் பாக்கியராஜ் கலந்துகொண்டு பேசியிருந்தார். அப்போது அந்த மேடையில் மீரா மிதுன் அநாகரீகமாக […]
%d bloggers like this: