சிவகார்த்திகேயன்- விஜய்சேதுபதி இணைந்து வெளியிட்ட… ரியோ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

பானா காத்தாடி மற்றும் செம போதை ஆகாதே போன்ற படங்ககளை இயக்கிய இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தற்போது நடிகர் ரியோவை வைத்து புது படமொன்றை இயக்குகிறார். இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.   சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளைஞர்களிடம் ஃபேமஸானவர் ரியோ ராஜ்.

அதில் கிடைத்த புகழை வைத்து சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து இல்லத்தரசிகளிடையேயும் படு பாப்புலர் ஆனார் ரியோ. அதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியானநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். ஓரளவிற்கு ஓடி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்ற அப்படத்தை தொடர்ந்து தற்போது இன்னொரு இன்னிங்ஸை துவங்கியுள்ளார் ரியோ. 

பாசிட்டிவ் பிரிண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரோபோ ஷங்கர், சந்தான பாரதி, ஆடுகளம் நரேன், முனீஷ்காந்த், பாஸ்கர் என்று இன்னும் ஏராளமானோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படம் மூலம் மூன்றாவது முறையாக பத்ரி வெங்கடேஷ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. தற்போது “பிளான் பண்ணி பண்ணனும்” என்ற இப்படத்தின் மோஷன் போஸ்டரை சிவகார்த்திகேயனும்,விஜய்சேதுபதியும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

Advertisements

Next Post

நேற்று திருமணம் செய்து கொண்ட 75 வயது நடிகர்... இன்று மருத்துவமனையில் அனுமதி..!!

Sat Jan 18 , 2020
வங்கமொழி திரையுலகில் நீண்ட காலமாக இருக்கும் பிரபல நடிகர் திபாங்கர் தே மற்றும் நடிகை டோலோன் ராய் ஆகிய இருவரும் நேற்று திருமணம் செய்துகொண்டனர். 75 வயதான திபாங்கர் தே மற்றும் 49 வயதான டோலோன் ஆகிய இருவரும் திடீரென திருமணம் செய்துகொண்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நீண்ட காலமாக இருவரும் லிவிங் டூ கெதர் உறவில் இருந்தாலும், இருவருமே அதனை மறுத்தது இல்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் […]
%d bloggers like this: