சுசி லீக்ஸ் சர்ச்சை குறித்து மனம் திறந்த பாடகி சுசித்ரா..!

தனது விவாகரத்து மற்றும் சுசி லீக்ஸ் விவகாரம் குறித்து பாடகி சுசித்ரா மனம் திறந்து பேசியுள்ளார். ஆர்ஜே, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி, நடிகை, பாடகி என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. இவரது துள்ளலான குரலுக்கு சொக்காதவர்களே இருக்க முடியாது. சினிமா வட்டாரத்தில் பெரும் நட்பு வட்டாரத்தை கொண்டிருந்தார் சுசித்ரா. இரவில் பார்ட்டி, ஆட்டம் பாட்டம் என தனது சினிமா நண்பர்களுடன் வாழ்க்கை கொண்டாடி கொண்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தனுஷ், டி.டி, ஹன்சிகா, த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, ராணா, ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், பாடகி சின்மயி ஆகியோர் அடங்கிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியானது. இதனால் ஒட்டுமொத்த கோலிவுட்டும் அதிர்ச்சியில் திகைத்து நின்றது. தொடர்ந்து டைமிங் அறிவித்து போட்டோக்களும் வீடியோக்களும் வெளியிடப்பட்டு வந்தன.

இதனால் பெரும் நெருக்கடிக்கு ஆளான சுசித்ரா, தன்னுடைய கணக்கிலிருந்து போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தான் வெளியிடவில்லை என்றும் தனது கணக்கை ஹேக் செய்துவிட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

தனது டிவிட்டர் கணக்கை ஹேக் செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கூட அளித்தார் சுசித்ரா. இதன் பிறகு சுசித்ராவுக்கு மனநிலை சரியில்லை என்று பரவலாகச் செய்திகள் வெளியாகின.இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சுசித்ரா, 4.5 லட்சம் பேர் பின் தொடரும் என் ட்விட்டர் பக்கத்தை யாரோ தவறாக பயன்படுத்தினர். இதனால் பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. நான் மன அழுத்தத்திற்கு ஆளானேன்.

Advertisements

fogpriya

Next Post

"நித்தியானந்தா" தனது நாட்டுக்கு அங்கீகாரம் கோரி 'ஐநா'சபையை அணுக திட்டமிட்டுள்ளார்..!

Thu Dec 5 , 2019
உலகம் முழுவதும் ஆதரவற்ற இந்துக்களுக்காக கைலாசம் என்ற புதிய நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்துள்ள சாமியார் நித்தியானந்தா தனது நாட்டுக்கு அங்கீகாரம் கோரி ஐநா.சபையை அணுக திட்டமிட்டுள்ளார். நித்தியானந்தாவின் சட்டவல்லுனர்கள் குழு இரவும் பகலுமாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். நித்யானந்தா உருவாக்கியுள்ள கைலாசா என்ற தனிநாட்டுக்கு ஐ.நா.சபையின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவுக்குத் திரும்பினால் தமது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தாம் தனிநாடு அமைத்து இந்து மதப் பிரச்சாரத்தில் ஈடுபட […]
%d bloggers like this: