இயக்குனர் அட்லியின் அடுத்த படத்திற்கு ஹீரோயின் தன் மனைவி பிரியாவா?

இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா, தொலைக்காட்சி தொடர்களிலும் சிங்கம், சிங்கம் 2, உள்பட ஒருசில படங்களிலும் நடித்தவர் என்பது தெரிந்ததே. ஆனால் திருமணத்திற்கு பின்னர் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழுக்க முழுக்க குடும்பத்தலைவியாக மாறினார்.

இந்த நிலையில் சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் அட்லி, ‘பிரியாவின் நடிப்பு திறமை குறித்து தனக்கு தெரியும் என்றும் நிச்சயம் அவரை ஒரு நல்ல கேரக்டரில் நடிக்க வைப்பேன் என்றும் கூறினார். இதனால் அட்லியின் அடுத்த படத்தில் பிரியா நாயகியாகவோ அல்லது முக்கிய கேரக்டரிலோ நடிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அட்லியின் அடுத்த படம் குறித்து இன்னும் ஒருசிறு தகவல் கூட வெளிவரவில்லை.

அவர் மூன்று கதைகளை முழுமையாக திரைக்கதை அமைத்து தயார் நிலையில் இருப்பதாகவும் ஆனால் இன்னும் அவர் அடுத்த படம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சொந்தப்படம் எடுக்க அட்லி முடிவு செய்திருப்பதாகவும், அந்த படத்தில் அனேகமாக அவரது முதல் பட நாயகன் ஆர்யா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisements

Next Post

சிம்பு நடிக்கும் 'மாநாடு' படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு..!!

Mon Jan 6 , 2020
சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்குவதாக இருந்த ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே தொடங்குவதாக இருந்தது. ஆனால் சிம்புவுக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் திடீரென இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் ‘மாநாடு’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 20ஆம் தேதி தொடங்கும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் […]

Actress HD Images

%d bloggers like this: