இந்த வயசுலேயே ஏம்மா இப்படி.. கமலுக்காக ரிஸ்க் எடுக்கும் பிரபல நடிகை!

சென்னை: இந்தியன் 2 படத்திற்காக பிரபல நடிகை ஒருவர் பெரும் ரிஸ்க் எடுத்திருக்கிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் படம் இந்தியன் 2. கமல்ஹாசன் நடிக்கும் இந்த படத்தை லைகா புரடெக்ஷன்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு பணிகள் மும்முரமாய் நடைபெற்று வருகின்றன. இந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல்அகர்வால், வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் படத்தில் பிரியா பவானி ஷங்கரின் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்தியன் 2 படத்தில் பிரியா பவானி ஷங்கர் வயதான கமலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இந்தியன் படத்தில் நடிகை சுகன்யா இந்த ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில் வயதான கேரக்டருக்கு தேர்வாகியிருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.

தற்போதுதான் பிரியா பவானி ஷங்கரின் மார்க்கெட் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அவர் வயதான கேரக்டரில் நடிக்கவுள்ளது அவரது ரசிகர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வயதான கேரக்டரில் நடிப்பது பெரிய ரிஸ்க், ஒரு வேளை இதுவே டிராபேக்காக அமைந்துவிட்டால் என்ன செய்வது என யோசிக்கின்றனர் ரசிகர்கள். ஆனால் ஷங்கர் மற்றும் கமல் சாருக்காக இவ்வாறு நடிப்பதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூறியிருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.

இந்த வாய்ப்பு கிடைத்ததை மிகவும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை கேள்விப்பட்ட கோலிவுட்காரர்கள் அம்மணிக்கு துணிச்சல் ஜாஸ்திதான் என தெரிவித்து வருகின்றனர்.

Advertisements

fogpriya

Next Post

டிக்டாக் சகவாசம் சேலையை கிழித்தது..! வீதிக்கு வந்த பெண்களின் அவலநிலை..!

Sun Nov 24 , 2019
டிக்டாக் ஒரு ஸ்வீட் பாய்சன்..! என்று பலமுறையை தலைபாடாக அடித்தாலும் கேட்காமல், டிக்டாக் மிகவும் பாதுகாப்பான பொழுதுபோக்கு செயலி என்று நம்பி வீடியோ பதிவிட்ட சில பெண்கள், தங்கள் குடும்பத்தினரை பிரிந்து அவமானத்துடன் வீதியில் தவிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை சேர்ந்த தோழிகளான மீனாட்சியும் கயலும் பாரம்பரிய உடையான சேலையுடன் டிக்டாக்கில் தோன்றி தாயும் பிள்ளையுமாக நடிப்புத்திறமையை வெளிக்காட்டுவது வழக்கம். […]
%d bloggers like this: