கணவருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ப்ரியங்கா சோப்ரா..!

உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.


 இவர் கடந்த டிசம்பர் 1 ம் தேதி அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதல் கணவருடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இடையிடையே அவருடன் எடுத்துக்கொள்ளும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது  சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார்.  இந்நிலையில் தற்போது இந்த காதல் ஜோடி தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். தற்போது தனது கணவருக்கு பிடித்த ஜேர்மன் ஷெப்பர்டு என்ற வகை நாயை சர்ப்ரைஸ் பரிசாக அளித்து காதலில் மூழகடித்துள்ளார். அந்த வீடியோவை ப்ரியங்கா தனது இன்ஸ்டாவில் பதிவிட தற்போது அது வைரலாகி வருகிறது. 

Advertisements

fogpriya

Next Post

பெண் கால்நடை மருத்துவர் எரித்து கொலை... ஹைதராபாத்தில் பயங்கரம்..!

Fri Nov 29 , 2019
ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணி புரிந்து வந்த பிரியங்கா ரெட்டி(26), தனது பைக் நேற்று நள்ளிரவு பஞ்சர் ஆனதால், டோல்கேட் அருகே தனியாக நிற்பதாகவும், பயமாக இருப்பதாகவும், தனது தங்கைக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், சிறிது நேரத்திலேயே அவரது போன் ஸ்விட்ச் ஆஃப் ஆன நிலையில், அதிகாலையில் பாலத்துக்கு அடியில் எரிந்த சடலமாக பிரியங்கா ரெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. பெண் மருத்துவர் பிரியங்கா […]

Actress HD Images

%d bloggers like this: