“லைக்கா” நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.. ‘தர்பார்’ வெளியாவதில் சிக்கல்..!

லைக்கா நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவால் தர்பார் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. லைக்கா புரோடக்சன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘தர்பார்’. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். இப்படம் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, இப்படம் வெளியாவதற்கு தடை கோரி மலேசியாவைச் சேர்ந்த திரைப்பட வினியோக நிறுவனமான DMY Creations சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.
அதில், படத்தயாரிப்புக்காக ரூ.12 கோடியை, ஆண்டுக்கு 30 சதவீத வட்டிக்கு லைக்கா நிருவனம் பெற்றதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், அந்தத் தொகை தற்போது வட்டியோடு ரூ. 23.70 கோடியாகியுள்ளதாகவும், அதனை இப்போது வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில், தர்பார் திரைப்படத்தி வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த மனுவுக்கு வரும் ஜனவரி 2-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கவேண்டுமென லைக்கா நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால், தர்பார் படம் குறித்த நாளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படம் வெளியாக 10 நாட்களே இருக்கும் நிலையில், படக்குழுவுக்கும் ரசிகர்களுக்கும் இச்செய்தி கவலை அளித்துள்ளது.

Advertisements

Next Post

பல இளம் பெண்களின் வாழ்க்கையில் விளையாடியவர்..என பிரபல ஹீரோ மீது நடிகை "ஶ்ரீரெட்டி" மீண்டும் பரபரப்பு புகார்..

Tue Dec 31 , 2019
பிரபல ஹீரோவை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார், சர்ச்சை நடிகை ஶ்ரீரெட்டி. சினிமா வாய்ப்புக்காகப் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம், தெலுங்கு சினிமாவில் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஶ்ரீரெட்டி. இவரது புகாரால் திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. அதோடு தனக்கு வாய்ப்பு தருவதாக ஏமாற்றி சீரழித்ததாக சில தெலுங்கு நடிகர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு அதிர்ச்சி அளித்தார் ஶ்ரீரெட்டி. தெலுங்கு சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பலர் மீது பரபரப்பு புகார் […]

You May Like

Actress HD Images

%d bloggers like this: