
துபாய் பீச்களில் பிகினியில் சுற்றித்திரிந்த புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த ராய் லக்ஷ்மி, தற்போது க்யூட்டான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். கோலிவுட்டில் தனக்கான சரியான இடம் கிடைக்கவில்லை என்று, பாலிவுட் சென்ற ராய் லக்ஷ்மிக்கு, அங்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அவர் நடிப்பில் இந்தியில் வெளியான ஜூலி 2 படமும் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. மீண்டும் தமிழுக்கு வந்த ராய் லக்ஷ்மி, நடிப்பில் வெளியான நீயா 2வும் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், பேய் படமான சிண்ட்ரெல்லா படத்தின் ரிலீசுக்காக வெயிட் செய்து வரும் ராய் லக்ஷ்மி மாடலிங்கில் அதீத கவனத்தை செலுத்தி வருகிறார்.

அண்மையில் துபாய்க்கு சுற்றுலா சென்றிருந்த ராய் லக்ஷ்மி, பாலிவுட் நடிகைகள் மற்றும் தனது தோழிகளான சோனாலி ஷெய்கல் மற்றும் சாமா சிக்கந்தருடன் பீச்சில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.
இந்நிலையில், தற்போது கருப்பு நிற டாப்ஸில் க்யூட்டாகவும் கொஞ்சம் ஹாட்டாகவும் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, கூடவே ‘டே ட்ரீமிங்’ என தான் பகல் கனவு காண்பதாக பதிவிட்டுள்ளார்.