பா.ஜ.க.,வில் இணைந்த ராதாரவி..! சின்மயி காட்டம்..! செவி சாய்ப்பாரா ஸ்மிரிதி இரானி?..

நயன்தாரா குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட ராதாரவி, தற்போது பா.ஜ.க.,வில் இணைந்துள்ளார். ராதாரவி பா.ஜ.க.,வில் இணைந்த நிலையில், மேடைகளில் பெண்களை அவமதிக்கும் விதமாகவும் ஆபாசமகாவும் ராதாரவி பேசி வருகிறார் என்றும், அவர் குறித்த குற்றச்சாட்டுக்களை அடுக்கி ஸ்மிரிதி இரானியிடம் இவரை ஏன் பா.ஜ.க.,வில் சேர்த்துள்ளீர்கள் என்ற தொனியில் கேள்வி எழுப்பியுள்ளார். மீடு விவகாரத்தில் இருந்தே ராதாரவியை விமர்சித்து வரும் சின்மயி, தற்போது ராதாரவி பா.ஜ.க.,வில் இணைந்துள்ள நிலையில், மீண்டும் விமர்சித்துள்ளார்.

நடிகர் ராதாரவி பா.ஜ.க.,வில் இணைந்துள்ள நிலையில், பா.ஜ.க., மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியை டேக் செய்து, ராதாரவி, தமிழ் நாட்டில் உள்ள உங்கள் கட்சியில் சேர்ந்துள்ளார். அவர் பொதுவாக மேடைகளை பயன்படுத்திக் கொண்டு பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி வருபவர் மேலும், டப்பிங் யூனியன் தலைவரான ராதாரவி, பாலியல் அத்துமீறல் கூறி வரும் நபர்களை யூனியனில் இருந்து விலக்கியுள்ளார் என சின்மயி காட்டமாக ட்வீட் செய்துள்ளார். சின்மயியின் இந்த ட்வீட்டுக்கு செவி சாய்ப்பாரா ஸ்மிரிதி இரானி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisements

fogpriya

Next Post

செல்போன் கட்டணங்கள் உயர்வு..! - unlimited கால்கள் இனி..!

Mon Dec 2 , 2019
ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆகிய செல்போன் கட்டணங்கள் நாளை முதல் 40 சதவீதம் உயர்த்தப்படுகின்றன. அன்லிமிட்டட் இலவச அழைப்புகளில் ஏர்டெல் மற்றும் வோடோபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மாதக் கட்டணம் வசூலித்து வருகின்றன. இலவச அழைப்புக்கான அளவு நிர்ணயத்தை தாண்டி பேசுபவர்கள் இனி நிமிடத்திற்கு 6 பைசாவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். மற்ற நிறுவனங்களின் எண்களில் பேசும் போது 1000 நிமிடங்களுக்கு இலவச அழைப்பு கொடுக்கப்படுகிறது.வோடோபோன் ஐடியா […]

Actress HD Images

%d bloggers like this: