“விஜய்” வசனத்தை பேசிய ராதிகா..!

இளைய தளபதி விஜய் பெயரை சொன்னாலும் அல்லது விஜய் பேசிய வசனத்தை பேசினாலும் எந்த ஒரு அரங்கமும் அதிரும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு அனைத்து இடங்களிலும் விஜய் ரசிகர்கள் பரவி உள்ளனர்
இந்த நிலையில் கலர்ஸ் டிவியில் நடிகை ராதிகா கோடிஸ்வரி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் தற்போது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது

இந்த நிலையில் நேற்று இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு இளம் பெண், தான் ஒரு விஜய் ரசிகை என்றும் விஜய்யும் நீங்களும் நடித்த ’தெறி’ படம் தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் நீங்கள் பேசும் ஒவ்வொரு வசனத்தையும் தான் ரசித்துக் கேட்ட தாகவும் குறிப்பிட்டார்அப்போது அந்தப் பெண்ணுக்கு நன்றி கூறிய ராதிகா, இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சில சம்பவங்களை எடுத்துக் கூறினார். அப்போது தெறி படத்தில் விஜய் தன்னை அம்மா என்று அழைக்க மாட்டார் என்றும் பாப்பா என்று தான் அழைப்பார் என்று கூறி, விஜய் பேசிய ஒரு வசனத்தைப் பேசி காட்டினார். அடுத்த நிமிடம் அரங்கம் அதிரும் வகையில் கைதட்டல் ஒலி நிற்க ஒரு சில நிமிடங்கள் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது
கலர்ஸ் தொலைக்காட்சியின் கோடிஸ்வரன் நிகழ்ச்சிக்குப் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் விஜய் பெயரைச் சொன்னவுடனேயே அரங்கம் அதிர்ந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

Advertisements

fogpriya

Next Post

'ஒய்.ஜி. மகேந்திரனை' அசிங்கப்படுத்திய பாடகி "சின்மயி"..!

Tue Dec 24 , 2019
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமையை வழங்குகிறது. இதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், மாணவர்கள் விடுமுறை கிடைக்கும் என்றும் சைட் அடிக்கவும் தான் போராட்டம் நடத்துகிறார்கள் என்று […]

Actress HD Images

%d bloggers like this: