ராகவா லாரன்ஸுடன் முதன்முதலாக இணையும் பிரபல இசையமைப்பாளர்!!

ராகவா லாரன்ஸின் புதிய படத்தில் ஒரு பிரபலம் இணையவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பல முகங்கள் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவரது இயக்கத்தில் வெளியான முனி, காஞ்சனா, கங்கா உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. இந்நிலையில் தற்போது இவர் ஃபைவ் ஸ்டார் கதிரேசனுடன் புதிய படம் ஒன்றில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. அது இல்லை செய்தி. இந்த படத்துக்கு இசை ஜி வி பிரகாஷ்குமார்.

ராகவா லாரன்ஸ் மொட்ட சிவா கெட்ட சிவா, ஷிவலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனால் முனி பாகங்களுக்கு நிகராக அவை வெற்றி பெறவில்லை. இதனால் மீண்டும் இயக்கத்தை கையில் எடுத்தார். ஆனால் இந்த முறை இந்தியில் படத்தை இயக்குகிறார். முனியின் இரண்டாவது பாகமான காஞ்சனாவை இந்தியில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி உள்ளிட்டோரை வைத்து இயக்கி வருகிறார்.

ஜிவி பிரகாஷ் தற்போது சூரரைப் போற்று படத்துக்கு இசையமைத்துள்ளார். இதன் பின்னர் தனுஷ், சூர்யா படங்களுக்கு இசையமைக்கவிருக்கிறார். மேலும் அவர் நடிக்கும் படங்களுக்கும் அவரே பெரும்பாலும் இசையமைப்பார் எனத் தெரிகிறது. இதனால் இந்த வருடம் ஜிவி பிரகாஷ் செம்ம பிஸியாக இருக்கிறார்.ராகவா லாரன்ஸுடன் ஜிவி பிரகாஷ் இணைவது இதுவே முதல் முறை.

Advertisements

Next Post

தன்னை ஆண்டி என்று அழைத்த நபரை வச்சி செஞ்ச வரலக்ஷ்மி சரத்குமார்...

Fri Mar 13 , 2020
போ டா போ டி என்ற படத்தின் மூலம் 2012ஆம் வருடம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் வரலக்ஷ்மி சரத்குமார். சிம்புவுடன் மிக நெருக்கமாக இந்த படத்தில் நடித்திருப்பார்.இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்குப்பின் நான்கு வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் மீண்டும் தாரை தப்பட்டை படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த படத்தில் கூட சரக்கும் தம்மும் என்று சில வ தந்திகள் கிளம்பியது. பாலா கொடுத்த அந்த […]
%d bloggers like this: