ரஜினி கட்அவுட்டு-க்கு ஹெலிகாப்டரிலிருந்து மலர்தூவ ரசிகர்கள் ஏற்பாடு…ரூ.5 லட்சம் வாடகை, 6 துறைகள் அனுமதி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த `தர்பார்’ திரைப்படம் 9-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிப்ளக்ஸில் உள்ள ஐந்து தியேட்டர்களிலும் இப்படம் திரையிடப்பட உள்ளது. இங்கு வைக்கப்படும் ரஜினிகாந்த் கட் அவுட்டுக்கு ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவ சேலம் ஆட்சியர் அலுவலகம் உட்பட 6 துறைகளிடம் அனுமதி கேட்டு ரஜினிகாந்த் ரசிகர் கனகராஜ், அவருடைய சகாக்கள் விண்ணப்பித்திருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுபற்றி ரஜினிகாந்த் ரசிகர் கனகராஜிடம் பேசினோம், ”என்னுடைய சொந்த ஊர் சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள பூலாவரி பாரப்பட்டி கிராமம். எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகனாக இருந்து வருகிறேன். அவர் நடித்த ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் கட் அவுட் வைத்து மாலை அணிவித்து பால் அபிஷேகம் செய்வேன்.

2001-ம் ஆண்டு அவர் அரசியலுக்கு வர வேண்டுமென்று திருப்பதிக்கு பாத யாத்திரை சென்றேன். 2013 அவருடைய ஆயுள் அதிகரித்து ஆரோக்கியமாக இருக்கவும், அரசியலுக்கு வந்து மக்களுக்கு அவர் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவும் சேலத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் யாகம் நடத்தினேன். இப்படி என் தலைவருக்காக பல நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறேன்.

70 வயதில் தலைவர் என்னா மாஸா… நடிக்கிறார். அதற்காகத் தலைவருக்கு வித்தியாசமான பாராட்டை தெரிவிக்க நானும் என்னுடைய நண்பர்கள் குரால்நத்தம் சந்திரசேகர், குளோபல் வெங்கட் ஆகியோர் சேர்ந்து 9-ம் தேதி `தர்பார்’ படம் சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிப்ளக்ஸில் உள்ள 5 தியேட்டரில் திரையிடப்படும்போது திரையரங்குக்கு வெளியே உள்ள தலைவர் கட் அவுட்களுக்கு காலை 9 மணிக்கு ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவ முடிவெடுத்தோம்.அதையடுத்து பெங்களூருவில் டாவன்கேர்சுகர் (DAVANGERESUGAR) என்ற தனியார் ஹெலிகாப்டர் கம்பெனியிடம் பேசினோம். 5 லட்சம் வாடகையும் அனுமதியும் பெற்றுக் கொடுத்தால் வருவதாகத் தெரிவித்தார்கள். அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை, அரசு கட்டடப் பொறியாளர், ஏர்போர்ட் என 6 துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தோம். யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சேலம் காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் மட்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமே என்று கூறிவிட்டு அவர்களும் அனுமதி கொடுப்பதாகத் தெரிவித்தார்கள்.

ஆட்சியர் அலுவலகம், மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை என 3 துறையினர் அனுமதி கொடுத்துவிட்டார்கள். இன்னும் மூன்று துறையினர் இன்று கொடுப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவுவது விளம்பரத்துக்காகச் செய்யவில்லை. உண்மையிலேயே என் தலைவர் ரஜினி அதற்கும் மேலான தகுதி உடையவர். எங்களால் முடிந்த இந்தச் செயலை செய்கிறோம். ரஜினிதான் எங்கள் உயிர். அவருக்காக நாங்கள் எதையும் எக்காலத்திலும் செய்வோம்” என்றார்.

Advertisements

Next Post

பிழை - சினிமா திரைவிமர்சனம்..!!

Tue Jan 7 , 2020
Turning Point Productions நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ஆர்.தாமோதரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். படத்தில், ‘காக்கா முட்டை’ ரமேஷ், ‘அப்பா’ நஸத், கோகுல், தர்ஷினி, ராகவேந்திரா, ‘மைம்’ கோபி, சார்லி, ஜார்ஜ், ‘கல்லூரி’ வினோத் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – பாக்கி, இசை – ஃபாஸில், எழுத்து, படத் தொகுப்பு – ராம் கோபி, பாடல்கள் – மோகன்ராஜ், ரா.தாமோதரன், கலை இயக்கம் – மனோ, சண்டை இயக்கம் […]
%d bloggers like this: