தமிழக ஸ்டைலில் தடல்புடல் விருந்து..ஜப்பானில் களைக்கட்டிய “ரஜினிகாந்த்” பிறந்தநாள்..! HBD thalaiva

ஜப்பானில் தமிழக ஸ்டைலில் தடல்புடல் விருந்துடன் ரஜினியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் நடிகர் ரஜினிகாந்துக்கு தங்களின் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு டிவிட்டரில் நேற்று முதலே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் பிறந்த நாள் ட்ரீட்டாக நேற்றே தலைவர் 168 படத்தின் பூஜை போடப்பட்டது.

இதனையே நேற்று டிவிட்டரில் ட்ரென்ட்டாக்கினர் ரஜினியின் ரசிகர்கள். அப்போதே ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்தும் தூள் பறந்தது. ரஜினியின் பிறந்தநாளை நேற்றே கொண்டாடத் தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.ஜப்பானில் ரஜினியின் ரசிகர்கள் கோலாகலமாக அவரது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். ஜப்பானில் உள்ள ரஜினி ரசிகர்கள் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டு ஸ்டைலில் தலை வாழையிலையில் தடல்புடல் விருந்து வைத்தனர்.

சாதம் சாம்பார், ரசம், வடை, பாயாசம் அப்பளம் என அமர்க்களப்படுத்திவிட்டனர். கூடவே பாஷா படத்தையும் ஒட்டி பட்டையை கிளப்பினர். பாஷா படத்தின் ஆட்டோக்காரன் பாடலுக்கு ரஜினி ஸ்டைலில் செம ஆட்டம் போட்டனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், என்னதான் தலைவருக்கு பிறந்தநாள் கொண்டாடினாலும்.. ஜப்பான் நாட்டில் தலைவரை கொண்டாடும் விதமே தனி அழகுதான்.. என தெரிவித்து வருகின்றனர்.

Advertisements

fogpriya

Next Post

"இருட்டு அறையில் முரட்டுக்குத்து 2" நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர்..!

Thu Dec 12 , 2019
இருட்டு அறையில் முரட்டுக்குத்து 2 படத்தில் மூலம் நடிகராக அவதாரம் எடுக்கிறார் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயகுமார். பாகம் 1 வெற்றி பெற்றதை அடுத்து பாகம் 2ல் தானே இயக்கி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹர ஹர மகாதேவி என்ற காமெடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சந்தோஷ் பி ஜெயகுமார். இப்படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றது. இதையடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து படம் வெளியாகி […]

Actress HD Images

%d bloggers like this: