மேன் VS வைல்டு ஷூட்டிங்கில் ரஜினிக்கு என்ன ஆச்சு..? தலைவர் 168 ஷூட்டிங் பாதிக்குமா..?

மேன் VS வைல்டு ஷூட்டிங்கின் போது காயம்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நேற்று இரவு சென்னை திரும்பினார் ரஜினி. மேன் vs வைல்டு ஷூட்டிங்கின் போது காயம்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நேற்று இரவு சென்னை திரும்பினார் ரஜினி. டிஸ்கவரி சேனலின் பிரபல நிகழ்ச்சியான Man vs Wild-ஐ பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார். அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது என்பதை தத்ரூபமாக படம்பிடித்து காட்டும் நிகழ்ச்சி அது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸுடன் ஏற்கெனவே பங்குபெற்றுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினியை வைத்து, கிரில்ஸ் நிகழ்ச்சியை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இதற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்தது. 
இந்நிலையில், ரஜினிக்கு ஷூட்டிங்கில் காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. தொடர்ந்து, 2 நாட்கள் நடந்த படப்படிப்பை முடித்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு சென்னை திரும்பினார். 

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ ஷூட்டிங் மைசூர் அருகேயுள்ள பந்திப்பூரில் நடந்தது. அதை முடித்துவிட்டு வருகிறேன். அதில் எனக்கு அடிபட்டுவிட்டது என்று சொன்னார்கள். அதெல்லாம் ஒன்றுமில்லை. ஷூட்டிங் நடந்த இடத்தில் நிறைய முட்கள் இருந்தன. அதில் சில முட்கள் குத்தின. அவ்வளவுதான்” என்றார். ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 168′ திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.

Advertisements

Next Post

கோயம்பத்தூர் அழகி.. காந்த கண்ணழகி... க்யூட்டாக சிரித்து..!சினுங்கிய அதுல்யா-வின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!

Wed Jan 29 , 2020
கோயம்பத்தூர் அழகி அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த […]
%d bloggers like this: