“ரஜினி”-யின் அடுத்த பட டைட்டில் என்ன தெரியுமா? வந்திறங்கியது அசத்தலான அப்டேட்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் சதிஷ், சூரி, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதற்கிடையில் அண்மையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.

அண்மையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தொடங்கவுள்ளது. தற்காலிகமாக தலைவர் 168 என அழைக்கப்பட்டு வந்த இப்படத்தின் டைட்டில் மற்றும் cast and crew குறித்த அப்டேட் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனம் தனது
ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக “அண்ணாத்த” என்ற இப்படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளனர். இந்த அப்டேட் ரஜினி ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Advertisements

Next Post

அடுத்து ஹிந்தி-க்கு செல்லும் சூர்யாவின் “சூரரைப் போற்று”…!

Tue Feb 25 , 2020
இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு சுதா கோங்கரா இயக்கும் திரைப்படம் “சூரரைப் போற்று”. இந்த படத்தை நடிகர் சூர்யா மற்றும் குணீத் மோங்கா தயாரித்துள்ளனர். சூர்யா, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று திரைக்கு வரவுள்ளது. அசுரன் படத்திற்கு பிறகு ஜி.வி பிரகாஷ் இந்த படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். பிரபல விமானச்சேவை ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவரான கோபிநாத்தின் வாழ்க்கையை […]
%d bloggers like this: