“இயக்குனர்” அவதார மெடுத்த ரம்யா நம்பீசன்..!!குவியும் வாழ்த்து மழை..!!

நடிகை ரம்யா நம்பீசன் திரையில் நடிகையாக மட்டுமல்லாமல் திரையின் பல பக்கங்களை, எப்போதும் முயன்று பார்ப்பவர். ஒரு பக்கம் பாடகராகவும் கலக்கிவரும் அவர், சமீபத்தில் இணையத்தில் கால்பதித்து யூடியூப் தளத்தில் தனக்கென தனி ஒரு சேனலை “Ramya Nambeesan Encore” எனும் பெயரில் ஆரம்பித்துள்ளார்.

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் இந்த சேனலில் தனது இயக்கத்தில் முதல் குறும்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். The Hide ( UN )learn எனும் அந்த குறும்படம் இப்போது ரசிகர்களிடம் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. இந்த சேனலில் பதிவேற்றப்பட்டிருக்கும் முதல் வீடியோவான இந்தக்குறும்படம் சமூகத்தில் பெண்களின் வாழ்வை, பிரச்சனைகளை, அதற்கான தீர்வை பேசுகிறது. இது குறித்து நடிகை ரம்யா நம்பீசன் கூறியதாவது…“Ramya Nambeesan Encore” என இணையம் வழி தொடங்கியிருக்கும் எனது இந்தப் பயணம் என் மனதுக்கு நெருக்கமானது. உலகில் உள்ள அனைவருடனும், எனது அன்பை, உணர்வை பகிர்ந்து கொள்ள எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு. எனது பார்வையை, எனது உலகத்தை, புதுபுது ஐடியாக்களை, பல புதுமையான விஷயங்களை முயன்று பார்க்க மிகப்பெரும் சுதந்திதரம் இந்த Youtube தளத்தின் மூலம் எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த தளத்திற்காக முதல் வீடியோவாக The Hide ( UN ) learn எடுக்க ஆரம்பித்தேன்.

இது இயக்குநராக எனது முதல் முயற்சி. இந்த வீடியோ இன்றைய நவநாகரீக உலகில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை, இந்திய சமூகத்தில் அவர்களின் நிலையை சொல்லக்கூடியது. இந்த வீடியோ எனது முதல் படைப்பாக தமிழுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட எனது Youtube தளத்தில் வெளியானது எனக்கு பெரும் மகிழ்ச்சி.
இந்த வீடியோ வழக்கமானா வீடியோ போல் வெறும் பிரச்சனைகளை மட்டுமே பேசக்கூடிய ஒன்று அல்ல. இறுதியில் பிரச்சனைகளுக்கான தீர்வை பற்றி விவாதிக்கவும் செய்வதாக இருக்கும். எனது இந்த Youtube தளம் இது போல் குறும்படஙகள் மட்டுமல்லாது, பாட ல்கள், நடனம் மற்றும் கலைவடிவங்கள் பலவற்றையும் முயற்சிக்கும் ஒன்றாக இருக்கும் என்றார்.

ரம்யா நம்பீசன் Encore N Poetic Stories தயாரித்துள்ள “The Hide ( UN ) learn “ வீடியோவை ரம்யா நம்பீசன் கருவாக உருவாக்கி, தன் குரலில் விவரித்து, இயக்கியுள்ளார். மேலும் தொழில்நுட்ப கலைஞராக மட்டுமல்லாமல் ஸ்ரிதா ஷிவதாஸ் உடன் இணைந்து இந்த வீடியோவில் நடித்துள்ளார். பத்ரி வெங்கடேஷ் இந்த வீடியோவிற்கு வசனம் எழுதியுள்ளார். நீல் சுன்னா ஒளிப்பதிவு செய்ய ரோஜின் தாமஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். ரம்யா நம்பீசனின் சகோதரர் ராகுல் சுப்பிரமணியம் இந்த வீடியோவிற்கு இசையமைத்துள்ளார்.

Advertisements

Next Post

உச்சக்கட்ட கவர்ச்சியில் "ஷாலு ஷம்மு" வெளியிட்ட புகைப்படங்கள்... திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்..!!

Sun Feb 16 , 2020
வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ புகழ் நடிகை ஷாலு ஷம்மு நடித்து வரும் புதிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’. இந்த படத்தை இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்குவதோடு, ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இதில் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் – ஷாலு ஷம்முவுடன் இணைந்து கரீஷ்மா, ஆக்ருதி, மீனாள், ரவி மரியா, சாம்ஸ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை வருகிற மே மாதம் ரிலீஸ் […]
%d bloggers like this: