ரியோ குழந்தை பிறந்துருச்சு..! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரியோ… என்ன குழந்தை தெரியுமா?

பிரபல மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி  தொகுப்பாளராக இருந்து,  தனது கலகலப்பான பேச்சாலும், செயலாலும் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் ரியோ ராஜ். அதனை தொடர்ந்து அவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் சரவணனாக நடித்ததன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார். 

அதனை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவிய ரியோ சத்ரியன் மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். 

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரியோ ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து கர்ப்பமாக இருந்த ஸ்ருதிக்கு சமீபத்தில்  வளைகாப்பும் நடைபெற்றது. இவ்வாறு ரொமான்டிக்காக வாழ்ந்து வந்த காதல் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனை ரியோ மிகவும் மகிழ்ச்சியாக  தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisements

Next Post

நடிகர் ஆனந்தராஜ் வெளியிட்ட பரபரப்பு தகவல்.! கடன் இல்லை! என் தம்பியின் தற்கொலைக்கு காரணம் இதுதான்..

Sun Mar 8 , 2020
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல வில்லன் நடிகராகவும்,  துணை கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் ஆனந்தராஜ். இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஆனந்தராஜுக்கு 5 தம்பிகள், 2 தங்கைகள் உண்டு. இவர்களில் கடைசி தம்பி கனகசபை. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனி வீட்டில் வசித்து வந்தார். இவர், வட்டிக்கு பணம் கொடுப்பது மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் படுக்கையறைக்கு […]
%d bloggers like this: