சாய் தன்ஷிகா சினிமாதுறைக்கு வர இவ்வளவு சிரமப்பட்டார..!

தமிழ் சினிமாவில் தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகள் மிககுறைவு ,அதில் தமிழும் சரியாக பேசி நல்ல நடிப்பையும் வெளிபடுத்துபவர் சாய் தன்ஷிகா .தஞ்சாவூர் பெண்ணான இவர் மாடலிங் மூலமாக சினிமாவிற்கு வந்தவர் . சாய் தன்ஷிகா 2006ல் திருடி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ,அந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமையாத காரணத்தால் ,அவர் அப்போது நடிப்புத்துறையில் மேலே வர மிகவும் சிரமப்பட்டார் .அதற்கு பிறகு 3 வருடங்கள் கழித்து எஸ்பி.ஜனார்தனன் இயக்கத்தில் வெளிவந்த பேராண்மை படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், அந்த படம் மாபெரும் வெற்றியடைய அதற்கு பிறகு அவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின .மாஞ்சா வேலு ,நில் கவனி செல் ,அரவான் ,பரதேசி,யாயா,திரந்திடு சீசே ,கபாலி,எங்க அம்மா ராணி,உரு,சோலோ,விழித்திரு,காத்தாடி,கல்லக்கூத்து ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார் .

சாய் தன்ஷிகா அரவான் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து அவருக்கு ‘மோஸ்ட் டேரிங் ரோல்’ விருது வழங்கபட்டது ,பொதுவாக இந்த விருது மிகவும் கடினமான கதாபாத்திரங்களில் நடிப்பவருக்கு மட்டும் தருவார்கள், அரவான் படத்தில் அப்படிப்பட்ட துணிச்சலான கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார். மேலும் பரதேசி போன்ற படங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தாலும் கூட தன்ஷிகாவுக்கு முதன்மை கதாநாயகிகான இடம் கிடைக்கவில்லை .அதற்கு பிறகு பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் மகளாக நடித்திருப்பார் தன்ஷிகா ,அந்த படத்தில் நடித்தற்கு பிறகு தன்ஷிகாவுக்கு மிக பெரிய அந்தஸ்த்து கிடைத்தது .

அந்த சமயத்தில் சாய் தன்ஷிகா நடித்த விழித்திரு படம் வெளியானது ,அப்போது படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது தன்ஷிகா தெரியாமல் செய்த தவறினால் நடிகர் மற்றும் இயக்குனரான டீ.ராஜேந்தர் மிக கடுமையான முறையில் தன்ஷிகாவை விமர்சித்தார் ,மேலும் ரஜினியுடன் நடித்ததால் உனக்கு திமிர் வந்து விட்டது என்று கூறி சாய் தன்ஷிகாவை கண் கலங்க வைத்த டீ.ஆர் கடைசியில் இதையெல்லாம் பட விளம்பரத்துக்காக தான் செய்தேன் என்று கூறினார் . ஆனாலும் அந்த நிகழ்வில் தன்ஷிகா மிகவும் மனம் உடைந்து போனார் . எப்படி பட்ட சூழலாக இருந்தாலும் அதை கடந்து சாதிக்கும் துணிச்சலும் தைரியமும் தன்ஷிகாவிடம் இருந்ததை அனைவரும் பாராட்டி கொண்டே தான் இருக்கின்றனர். தன்ஷிகா தேர்வு செய்யும் ஸ்க்ரிப்ட்ஸ் தான் மிகவும் முக்கியமாக கருத படுகிறது. வெறும் கவர்ச்சி ஆட்டம் என்று இல்லாமல் வித்யாசமான கதைகளை தேர்ந்து எடுத்து தூள் கிளப்பியிருக்கிறார்.

தற்போது தன்ஷிகா அடுத்துடுத்து தமிழில் முக்கிய படங்களில் நடித்து வருகிறார் மேலும் மளையாளம் ,கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார் தன்ஷிகா .

Advertisements

fogpriya

Next Post

பிகினி உடையில் இப்படி ஒரு போஸ் தேவையா? "துப்பாக்கி" பட நடிகையின் அட்ராசிட்டியை பாருங்க!

Mon Nov 25 , 2019
முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் முதன் முறையாக நடித்து மெகாஹிட் ஆன  துப்பாக்கி படம் நடிகர் விஜய்க்கும்  மாபெரும் வெற்றி படமாக அமைந்து. இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அக்ஷரா கவுடா. பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான உயர்திரு 420 என்ற படத்தில் அறிமுகமாகி பின்னர் துப்பாக்கி படத்தில் ஒரு ஐட்டம் கதாபாத்திரத்தில் […]
%d bloggers like this: