செம்ம க்கியூட்டா… அனைவரையும் சொக்க வைக்கும் அழகில் “பிக் பாஸ்” புகழ் சாக்ஷி அகர்வால்..!

‘விஸ்வாசம்’ படத்துக்கு பிறகு ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சாக்ஷி அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் ‘சிண்ட்ரெல்லா’. இதில் ஹீரோயினாக ராய் லக்ஷ்மி நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் வினூ வெங்கடேஷ் இயக்கி வருகிறார்.

அஸ்வமித்ரா இசையமைத்து வரும் இதற்கு ராம்மி ஒளிப்பதிவு செய்கிறார், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராகவும் – மணி மொழியன் ராமதுரை கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். இதனை ‘SSI புரொடக்ஷன்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

சமீபத்தில், படத்தின் டீசரை இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. படத்தை வருகிற மார்ச் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். சமீப காலமாக சாக்ஷி அகர்வால் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில் ஒன்றை சாக்ஷி அகர்வால் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். இந்த புகைப்படத்துக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்த வண்ணமுள்ளது.

Advertisements

Next Post

என்ன காப்பி அடிக்கிற வேலை வச்சுக்காதீங்க..! பிரபல நடிகையை ஜாடைமாடையாக திட்டிய "மீரா மிதுன்".. கடுப்பான ரசிகர்கள்...!

Fri Feb 28 , 2020
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை மீராமிதுன் பெரிய சர்ச்சை நாயகியாக உருவெடுத்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதற்கு பிறகு அவரது நடவடிக்கைகள் மிகவும் மோசமாகவும், தமிழக மக்களை வெறுப்பேற்றும் வகையிலும் அமைந்து வருகிறது. நடுரோட்டில் நின்று புகைப்பிடிப்பது, ஆண் நண்பர்களுடன் அசிங்கமான புகைப் படங்களை வெளியிடுவது, டான்ஸ் என்ற பெயரில் ஆண்களை கட்டி உரசுவது என தொடர்ந்து அனைவரது வெறுப்புகளையும் பெற்றுவருகிறார். இந்நிலையில் நயன்தாராவை ஜாடைமாடையாக தீட்டியது அவரது […]
%d bloggers like this: