படத்திற்காக சீரியசா ‘சிலம்பம்’ மற்றும் ‘தற்காப்பு’ கலைகளைக் கற்கும் “சாக்‌ஷி அகர்வால்”

நடிகை சாக்‌ஷி அகர்வால், ஆக்‌ஷன் படத்தில் நடிப்பதற்காக சிலம்பம் மற்றும் தற்காப்பு கலைகளைக் கற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். தமிழில், ராஜா ராணி, காலா, விஸ்வாசம், ஆயிரம் ஜென்மங்கள் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் சாக்‌ஷி அகர்வால். இப்போது சின்ட்ரெல்லா, டெடி உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 3 மூலம் புகழ் பெற்ற இவர், இப்போது ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கிறார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம் ஒன்றை ஜி.ஜே.சத்யா சத்யா இயக்குகிறார். இவர் ஏற்கனவே களிறு என்ற படத்தை இயக்கியவர். படத்துக்காக, சாக்‌ஷி சிறப்பு சண்டை பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இதுபற்றி சாக்‌ஷி கூறும்போது, இதில் பத்திரிகையாளராக நடிக்கிறேன். எனக்கு ஏழு ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளன. அதிக ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதால் முதலில் நடிக்க தயக்கமாக இருந்தது. பிறகு இயக்குனர் சம்மதிக்க வைத்தார். படத்துக்காக சிலம்பம் மற்றும் தற்காப்பு கலைகளை கற்றுவருகிறேன் என்றார்.

இயக்குனர் சத்யா கூறும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாக்‌ஷி, பல்வேறு சந்தர்ப்பங்களில் தன் திடமான மன உறுதியை வெளிப்படுத்தினார். அதைப் பார்த்தே, இந்த படத்துக்கு அவரை தேர்வு செய்தேன். நாயகியின் கேரக்டருக்கு ஏற்ப தீவிர சண்டை பயிற்சியில் ஈடுப்பட்டு திறமையை மெருகேற்றி வருகிறார். இந்த அர்ப்பணிப்பு அவரை மேலும் உயர்த்தும். கதைக்கு ஏற்ப சில தலைப்புகளை பரிசீலனை செய்து வருகிறோம். சில நாட்களில் வெளியிடுவோம் என்றார்.

Advertisements

fogpriya

Next Post

"புஷ்பவனம் குப்புசாமி" மகள் காணாமல் போனதாக சர்ச்சை..!

Tue Dec 17 , 2019
பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மகள் பல்லவி காணாமல் போயிருப்பது குறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, பல்லவியைத் தேடி வருகின்றனர்.பிரபல நாட்டுப்புற மற்றும் சினிமா பாடகரான புஷ்பவனம் குப்புசாமி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மருத்துவம் படித்துள்ள மூத்த மகள் பல்லவி (24). கடந்த ஞாயிறன்று , தனது காரில் வீட்டை விட்டு வெளியே சென்றார். […]

Actress HD Images

%d bloggers like this: