ஒத்த டிவிட்டை போட்டு வெறுப்பேத்திய “சாக்ஷி அகர்வால்” கடுப்பான கவின் ரசிகர்கள்..!

பிக்பாஸ் பிரபலமான சாக்ஷி அகர்வால் சக போட்டியாளரான கவினை சீண்டி டிவிட்டியிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலமான கவின் கலந்துகொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார் கவின். நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்திலும் நடித்துள்ளார் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின், சக போட்டியாளரான சாக்ஷியை காதலித்தார்.

கவினும் சாக்ஷியும் ஒருவரையொருவர் காதலித்த நிலையில் லாஸ்லியாவும் கவினை காதலித்தார். இதனை அறிந்த கவின், சாக்ஷியை கழட்டிவிட்டுவிட்டு லாஸ்லியாவை காதலித்தார்.கவினும் சாக்ஷியும் ஒருவரையொருவர் காதலித்த நிலையில் லாஸ்லியாவும் கவினை காதலித்தார். இதனை அறிந்த கவின், சாக்ஷியை கழட்டிவிட்டுவிட்டு லாஸ்லியாவை காதலித்தார்.

இதுதொடர்பான பிரச்சனை நிகழ்ச்சி தொகுப்பாளரான கமலிடம் சென்றபோது கன்டென்டுக்காக 4 பேரை காதலித்ததாக கூறினார் கவின். இதனால் மக்களின் கோபத்திற்கு ஆளானார் கவின்.பிக்பாஸ் வீட்டிலேயே கவினுக்கும் சாக்ஷிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சாக்ஷி பிக்பாஸிலிருந்து வெளியேறிய பின்னர் கவினை விளாசி வீடியோ வெளியிட்டிருந்தார்.ஆடையை மாற்றுவது போல் கவின் பெண்களையும் மாற்றுவதாக சாடியிருந்தார். இதனால் கவின் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் சாக்ஷி.

இந்நிலையில் சாக்ஷி, மறைமுகமாக கவினை தாக்கி டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் எனது கடந்த காலங்களில் சிலரை நான் சந்திக்க முடியாமல் இருந்திருந்தால் என் எதிர்காலத்தில் நான் சந்திக்க கூடாததை அவர்கள் எனக்கு கற்று கொடுத்திருக்க மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார். சாக்ஷியின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் கவினைதான் சொல்கிறீர்கள் என்பது நன்றாகவே புரிகிறது. கசப்பான அனுபவங்களை மறந்துவிடுங்கள் என தெரிவித்துள்ளனர்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகவே புரிகிறது. சிலர் நம் வாழ்க்கையில் ஒரு நினைவகமாகவும் சிலர் பாடங்களாகவும் வருவார்கள். மோசமான நினைவுகளை நீங்கள் மீண்டும் நினைவில் வைத்துக்கொள்ளாதீர்கள்.. என தெரிவித்துள்ளார்.

Advertisements

fogpriya

Next Post

'விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா' "சுவாமித்தோப்பு" ஐயாவழி கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு..!

Thu Dec 19 , 2019
விஜய், அட்லி, நயன்தாரா கூட்டணியில் உருவான ‘பிகில்’ திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து இவர் ரஜினியுடன் நடித்த ‘தர்பார்’ படம் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இந்த படத்தை என்ஜே சரவணன், ஆர்ஜே பாலாஜி இணைந்து இயக்குகிறனர். கன்னியாகுமரியில் தொடங்கி இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில […]
%d bloggers like this: