கெட்டப் மாற்றி… ஆளே மாறிப்போன சமுத்திரக்கனி… 7மொழிகளில் உருவாகும் படத்தில் மதுரை தாதா ஆகிறார்…

மெகா பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி மதுரை தாதாவாக நடிக்க இருக்கிறார். கே.ஜி.எஃப் படத்துக்கு பிறகு கன்னடத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகும் படம், கப்ஸா. இதில் உபேந்திரா ஹீரோவாக நடிக்கிறார். சந்துரு இயக்குகிறார். தாதா கதையான இந்த படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் தயாராகிறது. சீன மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இதில் பிரபல தாதாவாக நடிக்கிறார் உபேந்திரா.

இதற்காக தாதாக்களின் வாழ்க்கையை, அவர்களின் மேனரிசம், சங்கேத வார்த்தைகள் உட்பட பலவற்றை ஆய்வு செய்து கதையை உருவாக்கி உள்ளனர். 80-களில் நடக்கும் கதை. இதன் தொடக்க விழா பெங்களூரில் நடந்தது. இதில் ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஒரு முன்னணி நடிகர் நடிக்க இருக்கின்றனர். அதாவது பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, நானா படேகர், பிரதீப் ராவத், ஜெயப்பிரகாஷ் ரெட்டி ஆகியோர் நடிக்கின்றனர்.

தமிழில் இருந்து சமுத்திரக்கனி நடிக்கிறார். இவர் மதுரை தாதாவாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. 80 களில் நடக்கும் கதை என்பதால் கெட்டப் மாற்றி, உடல் எடையை கூட்டி அவர் நடிக்க இருக்கிறாராம். படப்பிடிப்பு மும்பை, பெங்களூர், மதுரை, மங்களூரு பகுதியில் நடக்க இருக்கிறது. ஒரே நேரத்தில் ஒவ்வொரு மொழிக்கும் மாற்றி மாற்றி எடுக்க உள்ளனர். இதற்காக பக்கா திட்டத்துடன் படக்குழு களமிறங்க உள்ளது.

Advertisements

Next Post

யதார்த்த,ஆழமான பேச்சு.. தைரியமான,திடமான பேச்சு.. மாணவியின் பேச்சை கேட்டு அடக்க முடியாமல் மேடயிலே அழுத சூர்யா...

Mon Jan 6 , 2020
“பாப்பா.. நீ பேசறதை அம்மாவால கேட்க முடியலயேடா..ன்னு என் அம்மா சொன்னாங்க.. பரவாயில்லம்மா.. இங்க சூர்யா அண்ணன் வந்திருக்காரு.. அவர் முன்னாடி நான் பேச போறேன்.. நீ செல்போன்ல நான் பேசறதை கேளும்மான்னு சொன்னேன்” என்று அகரம் அறக்கட்டளை மாணவி பேசியதும், நடிகர் சூர்யா கண்கலங்கி போய்விட்டார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சூர்யா.. பல்வேறு சமூக பிரச்சனைகளை களைய அக்கறை காட்டி வருபவர். நடிப்பை தவிர விவசாயிகள் […]

Actress HD Images

%d bloggers like this: