3 லட்சம் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் சேர்க்க இருப்பதாக”சனம் ஷெட்டி”தகவல்..!

சனம் ஷெட்டி என்றவுடன் நமக்கு அவர் அளித்த சமீப பேட்டிகள் தான் ஞாபகம் வரும் அந்த அளவுக்கு அவர் காதலனான தர்ஷனுக்காக வெளியே நேர்காணல்களில் பேசியவர் சனம் ஷெட்டி. பெங்களூரை சேர்ந்த இவர் மாடலிங் மற்றும் நடிப்பை முன்னிலைபடுத்தி பணியாற்றி வருகிறார் . சனம் ஷெட்டி 2012ல் வெளிவந்த அம்புலி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர். தனது முதல் திரைப்படமே சவால் மிகுந்த படம் அதுவும் 3டி திரைப்படம் .அதில் தன்னால் முடிந்த உழைப்பை கொடுத்திருப்பார் சனம் ஷெட்டி. அதன் பிறகு தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்தார் சனம் ஷெட்டி .

ஒருபுறம் நடிப்பு மற்றொரு புறம் மாடலிங் என்று அசத்தி வந்த சனம் ஷெட்டிக்கு 2016ல் சரியான அங்கீகாரம் கிடைத்தது .2016க்கான மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார் .இதன்பின் பல விளம்பரங்களிலும் நடித்து வந்தார் சனம் . சனம் தமிழில் நன்கு பேசுவார் எனவே இவரின் தமிழ் படங்களுக்கு இவரே டப்பிங் செய்து விடுவார் மேலும் இவரின் நடிப்பில் தற்போது வெளியாக போகும் எதிர்வினையாற்று படத்திற்கு இவரே டப் செய்து உள்ளார் .

தனது சமூக வலைத்தள பக்கங்களின் மூலம் பல நல்ல விசயங்களுக்கும் ஆதரவு அளித்து வருகிறார் சனம் ஷெட்டி அதில் ஒன்று அவனும் நானும் எனும் ஒரினசேர்கையாளர்கள் கதையை மைய்யமாக வைத்து இயக்க பட்டிற்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டரை பகிர்ந்து விதிவிலக்கு விதியை விலக்கு இருமனம் விதைத்து திருமனம் செய்ய இருபால் இனைக்க அவசியம் என்ன என்ற வரிகளை போட்டு அந்த படத்திற்காக தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.

சமூக வளைத்தலங்களில் ஆக்கடிவ்வாக இருக்கும் சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொத்தம் 2லட்சத்து 98ஆயிரம் ரசிகர்களை கொண்டு இருக்கிறார். தற்போது 3லட்சம் ஆக ரசிகர்கள் சேர போகிறார்கள் அதற்கான சிறப்பு போட்டோசூட்டிற்கு அவர் தயாராகி இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர் .

சனம் ஷெட்டி அவர் காதலனான தர்ஷன் பிக்பாஸ் வீட்டின் உள் இருக்கையில் அவர் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு மீடியாக்கள் பலவற்றின் மூலம் தனது கருத்துக்களை பகிர்ந்து வந்தார் .அப்போது தான் சனம் ஷெட்டியை பலரும் அடையாளம் கண்டனர். அவர் பல படங்களில் அதற்கு முன்பே நடித்து இருந்தாலும் பிக்பாஸ் என்பது தனி புகழ் தான். சனம் நடித்த தமிழ் தெலுங்கு ,கண்ணட படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்காக காத்து இருக்கின்றன.

Advertisements

fogpriya

Next Post

"விஜய் ஆண்டனி"-க்கு ஜோடியாக பிரான்ஸ் நடிகையா?

Fri Dec 20 , 2019
காக்கி படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக பிரான்ஸ் நடிகை நடிக்கிறார். பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் படத்தை முடித்துவிட்ட, விஜய் ஆண்டனி, அடுத்து அக்னிச் சிறகுகள் மற்றும் காக்கி படங்களில் நடித்துவருகிறார். அக்னிச் சிறகுகள் படத்தை நவீன் இயக்கி வருகிறார். இதில் அருண் விஜய், அக்‌ஷரா ஹாசன், ரைமா சென் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்தது. அடுத்தும் வெளிநாடு செல்ல இருக்கின்றனர். காக்கி படத்தை ‘வாய்மை’ […]
%d bloggers like this: