ஒரே நாளில் வெளியாக இருக்கும் சந்தானத்தின் 2 படங்கள்…

தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான ‘ஏ1’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடியது. தற்போது இவரது நடிப்பில் ‘டகால்டி’ திரைப்படம் உருவாகியுள்ளது.
விஜய் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரித்திகா சென் நடித்துள்ளார். யோகிபாபு, ராதாரவி, சந்தான பாரதி, மனோபாலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் வருகிற ஜனவரி 31ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதே தினத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி நீண்ட காலமாக வெளியாகமல் இருந்த ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படமும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் பால்கி இயக்கியுள்ள இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார். பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பாட், மாயா சுந்தரகிருஷ்ணன், பூனம் ஷா, பிரியங்கா ஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Advertisements

Next Post

விருது விழாவில் கவர்ச்சியாக மஞ்சள் நிற உடையில் மின்னும் சமந்தா... போட்டோ ஷூட்...

Mon Jan 13 , 2020
நடிகை சமந்தா விருது விழாவில் கலந்து கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக உடையை அணிந்து புதிய போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதற்கான புகைப்படங்களையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.  Advertisements
%d bloggers like this: