‘சரவணா ஸ்டோர்ஸ்’ அண்ணாச்சி படத்தில் நாயகியாக தமன்னா!!படத்துக்கு என்ன டைட்டில்.. வைத்து இருக்காங்க தெரியுமா?

நியூ சரவணா ஸ்டோர்ஸ் பிரம்மாண்டமாய் வழங்கும், அறிமுக நாயகன் லெஜென்ட் சரவணன் தயாரித்து, நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வந்தது. இந்த படத்தை இரட்டை இயக்குநர்கள் ஜேடி–ஜெர்ரி இணைந்து எழுதி, இயக்குகிறார்கள். இதில் சரவணனுக்கு ஜோடியாக தமன்னா, அறிமுக நாயகி கீத்திகா என டபுள் ஹீரோயின்ஸாம்.

மேலும், முக்கிய வேடங்களில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி இராமையா, யோகி பாபு, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இதற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார்.

படத்தில் இடம்பெறும் முதல் பாடலை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளாராம். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்துக்கு ‘அன்பானவன்’ என்று டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. வெகு விரைவில் இப்படம் குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Next Post

ஹீரோயினாக களமிறங்கிய ஈழத்து பட்டாம்பூச்சி...செமி ஸ்லீவ்லெஸில் லாஸ்லியா... உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

Fri Feb 21 , 2020
பிக்பாஸ் சீசன்3யில் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இவருக்கு ஆரம்பத்தில் இருந்த ரசிகர்கள் இப்போது இல்லை. அதற்க்கு அவர் காதலில் விழுந்ததாக கூட இருக்கலாம். ஆனால் அவரது அப்பா இடையில் வந்து அவரது காதலுக்கு முற்று புள்ளி வைத்து விட்டார். அதனை தொடர்ந்து விருது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த லாஸ்லியா கதாநாயகியாக அவதாரம் எடுக்கப் போவதாக தகவல் வெளியானது. அதேபோல் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் பிரெண்ட்ஷிப் […]
%d bloggers like this: