சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணி.. நாடோடிகள் – 2 திரைப்படம் குறித்த லேட்டஸ் அப்டேட்..!

சசிகுமார் நடிக்கும் நாடோடிகள் – 2 திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், விஜய் வசந்த், அனன்யா, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்து 2009-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நாடோடிகள்’. நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் வசூல் ரீதியாகவும், விமரசன ரீதியாகவும் பெரும் வெற்றியடைந்தது. அதையடுத்து, சமுத்திரக்கனியும், சசிகுமாரும் தனித்தனியாக பல படங்களை, இயக்கியும், நடித்தும் வந்த நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் இந்த கூட்டணி ஒன்றிணைந்தது. நாடோடிகள் 2 திரைப்படம் துவங்கியது.

நாடோடிகள் 2 திரைப்படத்தில், சசிகுமாருடன் அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ் பேனரில் எஸ். நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்துக்கு என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார். மேலும், இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வர்பேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று இப்படத்தின் லேட்டஸ் அப்டேட்டை புதிய போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இப்படம் இம்மாதம் வெளியாவதாக உறுதிசெய்துள்ளது.

Advertisements

Next Post

"குயின்" இணையதள தொடரை தடை விதிக்க கோரிய வழக்கு.. சென்னை ஹைகோர்ட்! தள்ளுபடி செய்தது..

Fri Jan 3 , 2020
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட குயின் இணையதள தொடரை தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இயக்குநர் கெளதம் மேனனுன், ‘கிடாரி’ இயக்குநர் பிரஷாந்த் முருகேசனும் ‘குயின்’ என்ற பெயரில் ஜெயலலிதா -வின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக இயக்கியுள்ளனர். குயின் வெப் சிரீஸில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ‘சக்தி சேஷாத்ரியாக’ ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளர். ஜெயலலிதாவின் பள்ளிப் பருவத்திலிருந்து தொடங்கும் இந்த வெப் […]

Actress HD Images

%d bloggers like this: