உதயநிதி ஸ்டாலின் நடிக்கும்‘சைக்கோ’ படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ்..!

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் ‘சைக்கோ’ திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. விஷாலின் ‘துப்பறிவாளன்’ படத்துக்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘சைக்கோ’. இந்த படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். இதில் உதயநிதிக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும், முக்கியமான போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குநர் ராம் நடிக்கிறாராம். இதனை ‘டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. ‘இசைஞானி’ இளையராஜா இசையமைக்கும் இப்படத்தற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்திலிருந்து சித் ஸ்ரீராம் பாடிய ‘உன்ன நெனச்சி நெனச்சி’ பாடல் நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் இம்மாதம் வரும் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்திலிருந்து மீண்டும் சித் ஸ்ரீராம் குறளில் ‘நீங்க முடியுமா’ எனும் பாடல் வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தந்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தற்போது இப்பாடலின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisements

Next Post

வடிவேலு மீது பைனான்சியர் புகார் – தலைமறைவான வைகைப்புயல் வடிவேலு....

Wed Jan 8 , 2020
தனக்கு தரவேண்டிய 2 கோடி ரூபாய் பணத்தைத் தராமல் வடிவேலு மிரட்டுவதாக எலி படத்தின் பைனான்சியர் ராம்குமார் புகார் அளித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு வடிவேலு ஹீரோவாக நடித்த திரைப்படம் எலி. அந்த படம் பைனான்ஸ் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட போது வடிவேலுவின் நண்பரான ராம்குமார், தயாரிப்பாளர் சதிஷ்குமாருக்கு 2015 ஆம் ஆண்டு 2 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளார். ஆனாலும் படம் ரிலிஸான பின்னரும் அந்த பணத்தை வடிவேலுவும் தயாரிப்பாளரும் […]
%d bloggers like this: