நயன்தாரா தான் எனக்கு ரோல் மாடல்.. சீறு நாயகி ரியா சுமன் ஓப்பன் டாக்..!!

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி உள்ள சீறு படம் பிப்ரவரி 7ம் தேதி நாளை திரைக்கு வருகிறது. சீறு படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக டோலிவுட் நடிகை ரியா சுமன், தமிழில் அறிமுகமாகிறார். சீறு படத்தின் நாயகி ரியா சுமன் அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டி வைரலாகி வருகிறது.

டோலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டான பேப்பர் பாய் படத்தில் நடித்ததை பார்த்து இயக்குநர் ரத்ன சிவா தன்னை சீறு படத்தில் நடிக்க அழைத்ததாகவும், கும்பக்கோணத்தில் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ள ரியா சுமன், கொஞ்சும் தமிழில் அழகாக பேசியுள்ளார். கும்பகோணம் டிகிரி காப்பி, கூழ், பாயாசம் உள்ளிட்ட பல தமிழ்நாட்டு உணவு வகைகளை ஹீரோ ஜீவா தனக்கு அறிமுகப்படுத்திய தகவல்களையும் நாயகி ரியா பகிர்ந்துள்ளார். வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 7ம் தேதியான நாளை சீறு படம் ரிலீசாகிறது.

இந்த படத்தில் வாசுகி எனும் கதாபாத்திரத்தில் ரியா சுமன் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கீ மற்றும் கொரில்லா படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், நாளை வெளியாகவுள்ள சீறு படம் நிச்சயம் ஜீவாவுக்கு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலிவுட்டுக்கு புதிதாக வந்து இறங்கியுள்ள ரியா சுமனுக்கு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான் ரோல் மாடல் என்று கூறியுள்ளார்.

Advertisements

Next Post

இதுவரை இல்லாத கவர்ச்சியில்....ராஷி கண்ணாவின் ஏஞ்சல் லுக் புகைப்படங்கள் ....!

Fri Feb 7 , 2020
Advertisements
%d bloggers like this: