வில்லி நடிகையின் வலையில் சிக்கிய ஹீரோ.. கணவர் மீது நடிகை போலீசில் புகார்.. பிரபல சீரியல் நடிகர் கைது..!

மனைவியை தாக்கிய வழக்கில் பிரபல சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாத் கைது செய்யப்பட்டுள்ளார். கல்யாணப் பரிசு உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஈஸ்வர் ரகுநாத். சின்னத்திரையில் நடன இயக்குனராக உள்ள ஜெயஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜெயஸ்ரீயும் சீரியல் நடிகை தான். அவர் வம்சம் உள்ளிட்ட சில சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திருமணத்திற்குப் பின் இவர்கள் இருவரும் சென்னை திருவான்மியூர் எல்.பி.சாலையில் வசித்து வருகின்றனர்.

ஜெயஸ்ரீயின் சொத்து ஆவணங்கள் சிலவற்றை அடகு வைத்து ரூ.30 லட்சம் வரை ஈஸ்வர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஈஸ்வரால் கடனை திருப்பிச் செலுத்தி, அடகு வைத்த பத்திரத்தை மீட்க முடியாத நிலை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பிரச்சினை முற்றி, இருவருக்கும் இடையே பெரும் சண்டை ஏற்பட்டு இருக்கிறது.

அப்போது, ஜெயஸ்ரீயை ஈஸ்வர் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் பலத்த காயமடைந்த ஜெயஸ்ரீ, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்த போலீசார், ஈஸ்வர் மற்றும் அவரது தாய் சந்திரா ஆகியோரை கைது செய்தனர். 54 வயதாகும் சந்திராவை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். ஈஸ்வர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஈஸ்வர் அடித்ததால் காயமடைந்த ஜெயஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

fogpriya

Next Post

விஜய்27 வருட காமன் டீபியை வெளியிட்ட மோகன் ராஜா..!

Tue Dec 3 , 2019
டிசம்பர் 4, 1992 அன்று வெளியானது நாளைய தீர்ப்பு படம் ,அந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் விஜய் ,இயக்குனர் மகன் என்பதால் வாய்ப்பு கிடைத்தது என்று பலரும் கேலி பேச தொடர் தோல்விகளையே முதலில் விஜய் சந்தித்தார் ,1996ல் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த பூவே உனக்காக படம் தான் விஜய்க்கு முதல் ஹிட் ,அதன் பின் விஜய்க்கு தோல்விகளை எப்படி தாண்டி வருவது என்பதை உணர்ந்தவராகினார் . […]
%d bloggers like this: