சீரியல் நடிகை “ஜெயஸ்ரீ” தீபாவளி பார்ட்டியை யாருடன் கொண்டாடினார்?பிக்பாஸ் பிரபலம் விளக்கம்..!

நடிகை ஜெயஸ்ரீ தீபாவளி பார்ட்டியை மகாலட்சுமியின் கணவருடன்தான் கொண்டாடினாரா என்பது குறித்த தகவலை பிக்பாஸ் பிரபல நடிகை அம்பலப்படுத்தியிருக்கிறார்.சீரியல் நடிகை ஜெயஸ்ரீயின் குடும்பப் பிரச்சனைதான் இப்போது தமிழ் சின்னத்திரை உலகின் ஹாட் டாப்பிக். தனது கணவரான ஈஸ்வருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டார் நடிகை ஜெயஸ்ரீ. தன்னை அடித்து துன்புறுத்துவதாக வெளியான புகாரை தொடர்ந்து ஈஸ்வர் கைது செய்யப்பட்டார்.பின்னர் ஜாமினில் வெளியே வந்த ஈஸ்வர், தனது மனைவி ஜெயஸ்ரீக்கும் மகாலட்சுமியின் கணவர் அனிலுக்கும்தான் தொடர்பு உள்ளது. இருவரும் ஒன்றாக பார்ட்டிகளில் சந்தித்து கொள்கின்றனர் என குற்றம்சாட்டினார்.

தீபாவளி பார்ட்டியில் மகாலட்சுமியின் கணவருடன் சென்று குடித்து விட்டு ஆட்டம் போட்டதாகவும் கூறினார். அவர் கூறியபடிதான் பணம் பறிக்கும் நோக்கத்தில் ஜெயஸ்ரீ நடந்துகொள்கிறார் என்றும் ஈஸ்வர் குற்றம்சாட்டினார்.

சீரியல் நடிகை மகாலட்சுமியும் இதே குற்றச்சாட்டைதான் கூறினார். ஆனால் மகாலட்சுமியின் கணவர் அனிலும் ஜெயஸ்ரீயும் இந்த குற்றச்சாட்டை மறுத்தனர். இந்நிலையில் ஜெயஸ்ரீயை தீபாவளி பார்ட்டிக்கு யார் அழைத்தது? யாருடன் அவர் கலந்துகொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்ட ரேஷ்மா தற்போது பேசியிருக்கிறார். தீபாவளிக்கு ஜெயஸ்ரீயை பார்ட்டிக்கு அழைத்தது தான்தான் என பிக்பாஸ் பிரபலம் ரேஷ்மா கூறியுள்ளார். அதோடு,ஜெயஸ்ரீக்கும் மகாலட்சுமியின் கணவருக்கு இடையே இருப்பது ஒரு அண்ணன், தங்கை உறவு மட்டும்தான் என்றும் அவர் உறுதியாக கூறினார்,

அவர்களின் உறவை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் ரேஷ்மா தெரிவித்துள்ளார். இதனிடையே தன்னை மகாலட்சுமியின் கணவருடன் ஒப்பிட்டு பேசிய தனது கணவர் ஈஸ்வரை சும்மா விடப்போவதில்லை என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

fogpriya

Next Post

வைபவ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணையும் 'ஆலம்பனா' அப்டேட்..!

Fri Dec 13 , 2019
பிரபல நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆலம்பனா’. இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சந்துரு இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை புதுமுக இயக்குநர் பாரி.கே.விஜய் கதை எழுதி இயக்குகிறார். இவர் முண்டாசுப்பட்டி மற்றும் இன்று நேற்று நாளை படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர். இந்த படத்தில் வைபவிற்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். […]

Actress HD Images

%d bloggers like this: