கருப்பு நிற உடையில் முகத்தில் சிரிப்புடன் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்…

கோகினுர் என்ற மலையாள படம் முலம் அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பின் கன்னடத்தில் நடித்து தான் அனைவருக்கும் தெரிந்தார். கன்னடத்தில் இவர் அறிமுகமான யூ டர்ன் திரைப்படம் அங்கு மிகப் பெரிய வெற்றி பெற்றது. பின் அங்கே நடித்து கொண்டு இருந்த ஷ்ரத்தா,பின்னர் தமிழில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடித்து அவ்வருடத்தின் பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்தார். இப்படம் இவருக்கு தமிழில் ஒரு நல்ல மார்கெட்டை ஏற்படுத்தியது.

இப்படத்தில் வரும் யாஞ்சி யாஞ்சி பாடல் அனைவரின் மொபைல் ரிங்டோன் ஆக இருந்தது. இப்பாடலில் குயூட் ஆக நடித்து இருப்பார் ஷ்ரத்தா. பின் அதே வருடத்தில் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தார். அதன் பின் தெலுங்கில் நானி நடித்த ஜர்சி படத்தில் அறிமுகமானார்.

இப்படம் அங்கு அவருக்கு நல்ல வரவேற்பைப் மக்களிடையே பெற்று தந்தது. பின் தமிழில் அஜித் உடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார் இப்படம் கடந்த வருடத்தின் மெகா ஹிட் ஆக அமைந்தது. தற்போது ஐர்சி படத்திற்காக ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஷ்ரத்தா அங்கு அவர் எடுத்த புகைப்படங்கள் ஆன்லைனில் வைரல் ஆகி வருகிறது.

Advertisements

Next Post

பட்டாஸ் - திரை விமர்சனம்..!!

Thu Jan 16 , 2020
திரைப்படம் பட்டாஸ்நடிகர்கள் தனுஷ், சினேகா, நாசர், மெஹ்ரீன் ஃபிர்ஸதா, நவீன் சந்திரா, முனீஸ்காந்த்ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ்இசை விவேக்இயக்கம் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார், கொடி படத்திற்குப் பிறகு மீண்டும் தனுஷுடன் இணைந்திருக்கும் படம் இது. கதையின் ஒன் – லைன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் ‘புதுமையானது’. அதாவது தந்தையைக் கொன்ற வில்லனை, மகன் பழிவாங்குவதுதான் அந்த ஒன் – லைன். […]
%d bloggers like this: