மீண்டும் தள்ளிப் போனதா மாநாடு ஷூட்டிங்..!! இந்த கடைசி நேர மாற்றத்துக்கு என்னதான் காரணம்…

மாநாடு படத்தில் இருந்து நடிகர் சிம்புவையே மாற்றலாம் என்ற அளவுக்கு சென்ற பிரச்சனை எல்லாம் தற்போது சுமூகமாக தீர்ந்து, கடந்த வாரம் பூஜையும் போடப்பட்டது. மாநாடு படத்தின் ஷூட்டிங் இன்று ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், சிம்புவின் மாநாடு ஷூட்டிங் மீண்டும் தள்ளிப் போயுள்ளது.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் அரசியல் படமாக மாநாடு உருவாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஷூட்டிங்குக்கு சிம்பு சரியாக வரவில்லை போன்ற காரணங்களை காட்டி, தயாரிப்பு தரப்புக்கும், சிம்புவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால், படமே டிராப் ஆகும் நிலைக்கு வந்தது.

பின்னர், சிம்புவின் அம்மா, தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் மாநாடு படம் ஆரம்பமாகும் என்ற அறிவிப்பும், படத்தில் நடிக்கப் போகும் நடிகர்கள் குறித்த அறிவிப்புகளும், தொடர்ச்சியாக வெளியாகி சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தன. சிம்புவின் மாநாடு பூஜை மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. நடிகர், இயக்குநர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பூஜையில் கலந்து கொண்டனர்.

பின் மாநாடு படத்தின் ஷூட்டிங் இன்று, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், இன்று ஷூட்டிங் நடைபெறவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஹைதராபாத் ஷூட்டிங்கிற்கு முன்னதாக சென்னையில் ஷூட்டிங் நடத்தவும் படக்குழு முடிவு செய்துள்ளது.

சிம்பு ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு மாநாடு படம் மாஸாக உருவாகும் என்றே தெரிகிறது. சென்னையில், உள்ள விஜிபி கோல்டன் பீச்சில் நாளை முதல் 9 நாட்களுக்கு பாடல் காட்சி ஒன்றை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான அரங்குகள் அமைக்கும் பணி இன்று நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், கல்லூரி விழா ஒன்றுக்கு மாநாடு பட கெட்டப்பில் சென்ற சிம்பு, உங்களுக்காக நான் இனி தொடர்ந்து நடிப்பேன் என்றும், தான் விட்ட இடத்தை விட பெரிய இடத்தை பிடிப்பேன் என்றும், ரசிகர்கள் மத்தியில் பேசி இருந்தார். சிம்புவின் பேச்சு சிம்பு ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தி, மாநாடு படத்திற்காக காத்திருக்க வைத்துள்ளது.

Advertisements

Next Post

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்... வினோத் செய்ததை பாருங்க..!!

Thu Feb 27 , 2020
பாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்.. அலறிய பெண்! Advertisements
%d bloggers like this: