புன்னகை அரசி “சினேகா”தன் மகளுக்கு இப்படி ஒரு மங்களகரமான பெயரா வைத்துள்ளார்? பிரசன்னா சொன்ன சீக்ரெட்..!!

நடிகை சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு ஜனவரி மாதம், அழகிய பெண் குழந்தை பிறந்த விஷயத்தை, நடிகரும், சினேகாவின் கணவருமான பிரசன்னா மிகவும் மகிழ்ச்சியோடு தை மகள் வந்தாள் என ட்விட்டரில் பதிவிட்டு தெரிவித்தார். ஏற்கனவே சினேகா – பிரசன்னா தம்பதிக்கு 4 வயதில் விஹான் என்கிற ஆண் குழந்தை இருக்கும் நிலையில், பெண் குழந்தை பிறந்துள்ளதால் இருவருமே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

தற்போது தங்களுடைய குழந்தைக்கு மிகவும் வித்தியாசமான பெயரை இருவரும் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சினேகா – பிரசன்னா இருவரும் தங்களுடைய செல்ல மகளுக்கு ‘ஆத்யந்தா’ என்ற பெயரை சூட்டி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. எந்த ஒரு நல்ல விஷயங்களையும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் பிரசன்னா விரைவில் தன்னுடைய செல்ல மகள் பெயரையும் பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்க்கலாம்.

சினேகா கர்ப்பமாக இருக்கும்போதே, அடிமுறை என்கிற தற்காப்பு கலையின் பயிற்சி எடுத்து நடித்த ‘பட்டாஸ்’ திரைப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாகி, சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அதே போல் நடிகர் பிரசன்னாவும், தொடர்ந்து தரமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து, தன்னுடைய மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

Advertisements

Next Post

காதலர் தினத்தை இனிமையாக கொண்டாட இந்த 14 விஷயத்தை கடைபிடியுங்கள்..!!

Thu Feb 13 , 2020
Advertisements
%d bloggers like this: