அடுத்து ஹிந்தி-க்கு செல்லும் சூர்யாவின் “சூரரைப் போற்று”…!

இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு சுதா கோங்கரா இயக்கும் திரைப்படம் “சூரரைப் போற்று”. இந்த படத்தை நடிகர் சூர்யா மற்றும் குணீத் மோங்கா தயாரித்துள்ளனர். சூர்யா, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று திரைக்கு வரவுள்ளது. அசுரன் படத்திற்கு பிறகு ஜி.வி பிரகாஷ் இந்த படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

பிரபல விமானச்சேவை ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவரான கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இந்த படத்தை குணீத் மோங்கா ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார். இன்னும் இந்த படத்திற்கு கதாநாயகனை தேர்வு செய்யாத காரணத்தால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த படம் இந்த ஆண்டு தீபாவளியன்று திரைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது. இந்த படத்தையடுத்து சூர்யா, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் “வாடிவாசல்” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைப்பாளரென்று இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு அறிவித்துள்ளார்.

Advertisements

Next Post

துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து "மிஷ்கின்" விலகல்...இதுதான் காரணமா?

Tue Feb 25 , 2020
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படத்தின் 2ம் பாகம் படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் விலகி உள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடித்துள்ள நிலையில், சமீபத்தில் வெளிவந்த சைக்கோ படம் மிக பெரிய வெற்றியடைந்தால் துப்பறிவாளன் படத்திற்காக மிஸ்கின் சம்பளத்தை உயர்த்தி கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கு தயாரிப்பு நிறுவனம் உடன்படாததால், படத்தில் […]
%d bloggers like this: