ஸ்பைடர்மேன் படங்கள் தயாரிப்பை கைவிட்டது மார்வெல் நிறுவனம்

உலகப் புகழ் பெற்ற காமிக்ஸ் ஹீரோ ஸ்பைடர்மேன் இல்லாமல் அடுத்த படத்தை தயாரிக்க மார்வெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஸ்பைடர் மேன் படங்களை 2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் மார்வெல்நிறுவனம் தயாரித்துள்ளது. இவ்விரு படங்களும் வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளன. இதில் டாம் ஹாலண்ட் ஸ்பைடர் மேனாக நடித்திருந்தார். இனிமேல் ஸ்பைடர் மேன் படங்களைத் தயாரிப்பதில்லை என்று மார்வெல் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ஸ்பைடர் மேன் படங்களின் தயாரிப்பு நிறுவனங்களான டிஸ்னி நிறுவனத்திற்கும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் இடையே வர்த்தக ரீதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஸ்பைடர் மேன் படங்களை தயாரிக்கப்போவதில்லை என்று மார்வெல் தயாரிப்பு நிறுவன தலைவர் கெய்ன் பெய்ஜ் அறிவித்துள்ளார்.

இந்த முடிவு ஏமாற்றமளிப்பதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆயினும் கெய்ன் பெய்ஜின் முடிவுக்கு மதிப்பு கொடுப்பதாக சோனி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisements

Next Post

ப.சிதம்பரத்தின் அரசியல் வாழ்வும்.. பல்வேறு சர்ச்சைகளும்..!

Thu Aug 22 , 2019
ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் கைதாகியுள்ள, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், தமது நீண்ட நெடிய அரசியல் வாழ்வில் பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளாகியுள்ளார். ஹாவர்ட் பிசினஸ் கல்வி நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்ற ப.சிதம்பரம், 1984ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சிவகங்கை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசுகளில் வர்த்தக அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் பல்வேறு பொறுப்புகளை […]
%d bloggers like this: