சுதீப் மற்றும் அமலாபாலின் “பொய்யாட்டம்”-திரை விமர்சனம்..!!

நாயகன் சுதீப், ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர் பயங்கரவாதிகள் பிடியில் இருந்து அமலாபால் உள்பட 3 டாக்டர்களை காப்பாற்றுகிறார். இதனால் அமலாபால், சுதீப் மீது காதல் வயப்படுகிறார். இந்த சூழலில், ஐ.ஏ.எஸ். அதிகாரியான  சுதீப் அண்ணன் தற்கொலை செய்து கொண்டதாக வீட்டிலிருந்து திடீர் அழைப்பு வருகிறது. சுதீப் அண்ணனின் உடற்கூறாய்வு அறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடையும் அமலாபால், இது தற்கொலை அல்ல கொலை என சுதீப்பிடம் தெரிவிக்கிறார். இதையடுத்து தனது அண்ணனை கொன்றது யார் என கண்டுபிடிக்க சுதீப் தீவிரம் காட்டுகிறார். இறுதியில் தனது அண்ணனை கொன்றது யார் என சுதீப் கண்டுபிடித்தாரா? அமலாபாலை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் சுதீப், ராணுவ அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அதேபோல் காதல், சென்டிமெண்ட், ஆக்‌ஷன் காட்சிகளிலும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். டாக்டராக வரும் நாயகி அமலா பால், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். சுதீப்-அமலாபால் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பிளஸ்.
சுதீப்பின் அண்ணனாக நடித்துள்ள ரவிச்சந்திரன் குறைந்த காட்சிகளே வந்தாலும், அவரின் கதாபாத்திரம் படத்திற்கு திருப்புமுனையாக அமைகிறது. வில்லன் கபீர் துகான் சிங் தனது வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். மேலும், ரவி கிஷான், அவினாஷ், கல்யாணி, பிராச்சி ஆகியோரின் யதார்த்தமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. இயக்குனர் எஸ்.கிருஷ்ணா காமெடி, ஆக்‌ஷன், காதல், சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த பக்கா கமர்ஷியல் படமாக கொடுத்துள்ளார். திரைக்கதையை தொய்வு இல்லாமல் கையாண்டுள்ள விதம் சிறப்பு. அர்ஜுன் ஜன்யாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. கருணாகரின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. 

Advertisements

Next Post

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

Mon Jan 13 , 2020
சூர்யாவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார் என்பது ஏற்கனவே அறிந்ததே. இந்நிலையில்,  படத்தின் பெயரை வெற்றிமாறன் அறிவித்துள்ளார். சூர்யா நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் ‘சூரரை போற்று’. இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கயிருக்கிறார் என தகவல்கள் ஏற்கனவே வெளியாகியது. அத்தோடு, ‘அசுரன்’ படத்தை தொடர்ந்து ஷாருக்கானுடன் ஒரு இந்திப்படத்தில் இணைவதாகவும்,மேலும் விஜய், சூர்யாவுடன் வெற்றிமாறன் இணைகிறார் எனவும் தகவல் இணையத்தில் கசிந்தது. இதற்கிடையே நகைச்சுவை நடிகர் சூரியை […]
%d bloggers like this: